eSign Aadhaar: ஆதார் மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்வது எப்படி..!!

eSign என்பது ஒரு ஆன்லைன் மின்னணு கையொப்ப சேவையாகும். இதன் மூலம் ஆதார் வைத்திருப்பவர் ஒரு ஆவணத்தில் முறையில் டிஜிட்டல் கையொப்பமிடலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 12:01 PM IST
  • eSign என்பது ஒரு ஆன்லைன் மின்னணு கையொப்ப சேவையாகும்.
  • ஆதார் வைத்திருப்பவர் ஒரு ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட அனுமதிக்கும்.
  • பயோமெட்ரிக்/ஒருமுறை-கடவுச்சொல் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஆதார் வைத்திருப்பவர் இப்போது ஒரு ஆவணத்தில் கையெழுத்திடலாம்.
eSign Aadhaar: ஆதார் மூலம் டிஜிட்டல் கையொப்பம் செய்வது எப்படி..!! title=

புதுடெல்லி: இந்தியாவில் குடியிருப்பவருக்கு  UIDAI வழங்கும் 12 இலக்க அடையாள எண் ஆதார். ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில் நடைமுறையில் அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் இது தேவைப்படுகிறது. மேலும், கோவிட்-க்கு பிந்தைய காலத்தில், மிகவும் பாதுகாப்பான பரிவர்த்தனையான  டிஜிட்டல் மயத்திற்கு மக்கள் மாறும்போது, ​​உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை வைத்திருப்பது எப்போதும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக சில ஆன்லைன் பரிவர்த்தனையில் ஆதாரை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தும் போது உங்கள் ஆதார் டிஜிட்டல் கையெழுத்தை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

eSign என்பது ஒரு ஆன்லைன் மின்னணு கையொப்ப சேவையாகும், இது குறித்து கூறிய உரிமம் பெற்ற சான்றளிக்கும் ஆணையமான NSDL e-Governance Infrastructure Limited (NSDL e-Gov), ஆதார் வைத்திருப்பவர் ஒரு ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. அதாவது பயோமெட்ரிக்/ஒருமுறை-கடவுச்சொல் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஆதார் வைத்திருப்பவர் இப்போது ஆவணத்தில் கையொப்பமிடலாம், இது காகித அடிப்படையிலான விண்ணப்பப் படிவம் அல்லது காகித வடிவைலான ஆவணங்களின் தேவையை நீக்குகிறது.

ALSO READ | Aadhaar Card: பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை எத்தனை முறை மாற்றலாம்?

ஆதாரில் eSign இருப்பதால் உள்ள நன்மைகள்

மின்னணு கையொப்பம் (eSign) பதிவு தொடர்பான வேலைகளஒ எளிதாக்குகிறது. ஆன்லைன் சேவையும் பாதுகாப்பானது, ஏனெனில், பயன்பாட்டிற்குப் பிறகு அதற்கான கீ உடனடியாக நீக்கப்படும்.  eSign வேறு பல  நன்மைகளைக் கொண்டுள்ளது,.

1. நேர சேமிப்பு.

2. குறைந்த செலவு சேமிப்பு.

3.  எங்கிருந்து வேண்டுனானாலும் பயன்படுத்தும் வசதி.

4.  சட்ட அங்கீகாரம்.

5. சரிபார்க்கக்கூடிய கையொப்பம்.

6.  பயனர் தனியுரியை பாதுகாத்தல்.

7.  காகித வடிவிலான ஆவணங்கள் தேவைப்படாததால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது

ஆன்லைனில் ஆதாரை (Aadhaar Card) எவ்வாறு கையொப்பமிடுவது என்பதை அறிந்து கொள்ளலாம்

1.  ஏதேனும் இணைய உலாவியைத் (web browser ) திறந்து, முகவரியில் https://uidai.gov.in/ அல்லது https://eaadhaar.uidai.gov.in என டைப் செய்யவும்.

2.  இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில்   "Validity Unknown" குறிகாட்டியில் வலது கிளிக் செய்யவும்.

3. கையொப்ப சரிபார்ப்பு நிலை (Signature Verification Status) விண்டோ இப்போது திரையில் தோன்றும்.

4.  ட்ராப் டவுன்  மெனுவிலிருந்து  'Signature properties' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ALSO READ | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!

5. "Show certificate" என்ற ஆப்ஷன்  உங்கள் திரையில் தோன்றும். அதைக் கிளிக் செய்யவும்.

6. ட்ராப் டவுன் மெனுவிலிருந்து  ‘NIC Sub-CA for NIC 2011, National Informatics Centre' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

7.  'Trust' மெனுவிலிருந்து  'Add to Trusted Identity' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

8. இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று, 'Validate signature'  ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

9. இதன் பின்னர் 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center' நம்பகத்தகுந்த அடையாளம் என உறுதி செய்யும் பட்சத்தில், அதன் பிறகு, CCA விலிருந்து வரும் அனைத்து டிஜிட்டல் கையெழுத்துகளும் தானாகவே சரிபார்க்கப்பட்டுவிடும்.

ALSO READ | Ration Card: நீக்கப்பட்ட பெயரை சேர்ப்பது எப்படி ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News