நவம்பர் 1ம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள்; முழு விபரம் உள்ளே..!!

நவம்பர் தொடக்கத்தில், உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான மாற்றங்கள் அமலாக உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2021, 04:32 PM IST
  • நவம்பர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன.
  • ரயில்வேயின் நேர அட்டவணை மாறும்.
  • எல்பிஜி சிலிண்டர் சப்ளை முறையில் மாற்றம் இருக்கும்.
நவம்பர் 1ம் தேதி முதல் பல முக்கிய  மாற்றங்கள்; முழு விபரம் உள்ளே..!! title=

புதுடெல்லி: நவம்பர் தொடக்கத்தில், உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான மாற்றங்கள் அமலாக உள்ளன. நவம்பர் 1 ம் தேதி முதல், நாடு முழுவதும் வங்கி விதிகள், சமையல் எரிவாயு முன்பதிவு, ரயில்வே அட்டவணையில் மாற்றம் என பலமுக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. 

நவம்பர் 1 முதல் ஏற்பட உள்ள மாற்றங்கள்

நவம்பர் 1ம் தேதி முதல் வங்கியில் டெபாசிட் செய்வது முதல் பணம் எடுப்பது வரை, கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, இப்போது பணத்தை டெபாசிட் செய்வதற்கு கூட பணம் செலவாகும். காஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளிலும் முக்கிய மாற்றம் வரவுள்ளது. இதனுடன், ரயில்வேயின் நேர அட்டவணையிலும் மாற்றம் இருக்கும். நவம்பர் 1 முதல் உங்களை பாதிக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்.

ரயில்களின் நேர அட்டவணை மாறும்

நவம்பர் 1 முதல், நாடு முழுவதும் உள்ள ரயில்களின் நேர அட்டவணையை இந்திய ரயில்வே மாற்ற உள்ளது. முன்னதாக, அக்டோபர் 1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்  இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால், அந்த முடிவினை அமல்படுத்துவது ஒத்தி போடப்பட்டு,  இப்போது புதிய கால அட்டவணை நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும். 13 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் 7 ஆயிரம் சரக்கு ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. இது மட்டுமின்றி, நாட்டில் இயங்கும் சுமார் 30 ராஜ்தானி ரயில்களின் நேரமும் நவம்பர் 1 முதல் மாறவுள்ளது.

ALSO READ: ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!! 

LPG சிலிண்டர் விலை

நவம்பர் 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) விலையில் மாற்றம் இருக்கலாம். LPG விலை அதிகரிக்கப்படலாம்  என்றும், எல்பிஜி விற்பனையில் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு மீண்டும் அதிகரிக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள்

நவம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர்கள் விநியோக முறை முழுவதுமாக மாறும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். சிலிண்டர் டெலிவரிக்கு வரும்போது, ​​இந்த OTPயை டெலிவரி பாய் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த குறியீடு கணினியுடன் பொருந்திய பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டரின் விநியோகம் செய்யப்படும். 

Whatsapp 

இது தவிர, நவம்பர் 1 முதல், சில ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் செயல்படாது. நவம்பர் 1 முதல், ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், iOS 9 மற்றும் KaiOS 2.5.0 ஆகியவற்றுக்கான வாட்ஸ் அப் சப்போர்ட் கிடைக்காது என பேஸ்புக்கிற்கு சொந்தமான இயங்குதளமான வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ: Aadhaar விதிகளில் மாற்றம்: மாற்றத்தால் மக்களுக்கு லாபம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News