செல்ல மகளுக்காக தினம் ₹416 சேமித்தால் போதும்; ₹65 லட்சம் பெறலாம்..!!

உங்கள் செல்ல மகளுக்கு தீபாவளி பரிசாக, அவள் எதிர்காலத்தில் பண தட்டுப்பட்டை சந்திக்காத வகையில், அவளுக்கான பாதுகாப்பு அளிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2021, 06:03 PM IST
செல்ல மகளுக்காக தினம் ₹416 சேமித்தால் போதும்; ₹65 லட்சம் பெறலாம்..!! title=

உங்கள் செல்ல மகளுக்கு தீபாவளி பரிசாக, அவள் எதிர்காலத்தில் பண தட்டுப்பட்டை சந்திக்காத வகையில், அவளுக்கான பாதுகாப்பு அளிக்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ஒரு நாளைக்கு 416 ரூபாய் மட்டுமே சேமித்து உங்கள் மகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். நாளொன்றுக்கு ரூ.416 சேமிப்பு உங்கள் மகளுக்கு ரூ.65 லட்சமாக மாறும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா 

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலை ஏதும் இல்லாமல் இருக்க முடியும். இதற்காக நீங்கள் அதிக பணம் கூட முதலீடு செய்ய வேண்டியதில்லை. உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது கணிசமான தொகை கிடைக்கும்.

பெண் குழந்தைகளுக்கான அரசின் சிறந்த திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் பிரபலமான திட்டம் இது. சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 10 வயது வரையிலான மகள் பெயரில் கணக்கைத் திறக்கலாம். இதில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மகளுக்கு 21 வயதாகும் போது மொத்தமாக பணம் கிடைக்கும் . இருப்பினும், மகளுக்கு 18 வயது ஆகும் வரை இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீடு லாக் செய்யப்பட்டிருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டத்திலிருந்து மொத்தத் தொகையில் 50% திரும்பப் பெறலாம். அதை அவள் பட்டப்படிப்பு அல்லது மேல் படிப்புக்கு பயன்படுத்தலாம். அவளுக்கு 21 வயது ஆகும்போது தான் எல்லாப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.

ALSO READ | LIC: தினம் ₹121 போதும், செல்ல மகளின் திருமணத்திற்கு ₹27 லட்சம் உங்கள் கையில்

15 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் 21 வருடங்கள் முழுவதுமாக பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை, கணக்கு துவங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதே நேரத்தில் மகளின் 21 வயது வரை அந்த பணத்திற்கு வட்டி குவிந்து கொண்டே இருக்கும். தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வீதம் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். இரட்டையர் இருந்தால், 3 மகள்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

முதலில் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவு முதிர்ச்சியின் போது உங்களுக்கு அதிகத் தொகை கிடைக்கும்.

எப்போது முதலீடு தொடங்க வேண்டும்

உங்கள் மகளுக்கு இன்று 10 வயதாகும் போது முதலீடு செய்யத் தொடங்கினால், 11 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மகளின் 5 வயது முதலீடு செய்யத் தொடங்கினால் 16 வருடங்கள் முதலீடு செய்யலாம். அதனால் முதிர்வு தொகை அதிகரிக்கும். உங்கள் மகளுக்கு இன்று 2021 உங்கள் மகளின் வயது ஒன்று என்றால், நீங்கள் இப்போதே முதலீடு செய்யத் தொடங்கினால். அது 2042 இல் முதிர்ச்சியடையும். மேலும் இந்த திட்டத்தின் அதிகபட்ச பலனை நீங்கள் பெறலாம்.

ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்

ரூ.416ல் இருந்து 65 லட்சம் ரூபாய் 

1. நீங்கள், உங்கள் மகளி ஒன்றாவது வயதில், அதாவது 2021 ஆம் ஆண்டு முதலீடு செய்யத் தொடங்கியதாக வைத்துக் கொள்வோம்.

2. இப்போது நீங்கள் ஒரு நாளைக்கு ரூ. 416 முதலீடு என்ற வகையில், மாதம் ரூ.12,500 முதலீடு செய்வீர்கள் 

3. ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு என்றால் ஆண்டிற்கு ரூ.1,50,000 டெபாசிட் செய்யப்படுகிறது.

4. 15 வருடங்கள் முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.22,50,000

5. ஆண்டுக்கு 7.6% வட்டியில், மொத்த வட்டி ரூ 42,50,000

6. 2042 இல், மகளுக்கு 21 வயதாகும்போது, ​​திட்டம் முதிர்ச்சியடையும், அந்த நேரத்தில் மொத்த முதிர்வுத் தொகை ரூ.65,00,000 ஆக இருக்கும்.

ALSO READ | விரைவில் சந்தைக்கு வர உள்ள ‘5’ கார்கள்; குறைந்த விலை; அசத்தல் அம்சங்கள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News