வீட்டு பெண்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னை எறும்பு தொல்லை. எதையும் சமைத்து வைத்தாலோ அல்லது சமையல் தொடர்பான பொருள்களை வைத்தாலோ எறும்புகள் மொய்த்து அதை நாசம் செய்துவிடுவதால் அதை ஒழிப்பதற்கு பெண்களும், வீட்டில் இருப்பவர்களும் பல வழிகளை கையாளவார்கள். இதற்காக கடைகளிலிருந்து எறும்பு மருந்து, எறும்பு சாக்பீஸ் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், அடுப்பறையில் இருக்கும் பொருள்களை கொண்டே எறும்பு தொல்லையை விரட்டலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிட்ரஸ் :


எலுமிச்சை , ஆரஞ்சு பழ தோல்களை எறும்பு நுழையும் இடத்தில் வைத்தால் எறும்புகளால் அதனை மீறி உள்ளே வரமுடியாது.  தோல்களை வைப்பது மட்டுமின்றி எலுமிச்சை, ஆரஞ்சு பழ சாறையும் எறும்பு நுழையும் இடத்தில் பிழிந்துவிடலாம்.


மிளகு: 


மிளகு தூளை தண்ணீரில் கரைத்து அதை எறும்புகள் வரும் இடம் முழுவதும் ஸ்பிரே செய்யலாம். அப்படி ஸ்ப்ரே செய்யும்போது எழும் கார நெடியால் எறும்புகள் வந்த தடமே தெரியாமல் ரிட்டர்ன் ஆகிவிடும்.


உப்பு: 


உப்பை எறும்புகள் நுழையும் மூலைகளில் தூவிவிட அவை வீட்டிற்குள்ளே நெருங்காது. இதற்காக பயன்படும் உப்பு கல் உப்பாக இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா? ஆன்லைனில் டூயூபிளிகேட் பெற்றுக்கொள்ளலாம்


பட்டை: 


பட்டை மற்றும் கிராம்பை பொடி செய்தோ அல்லது அப்படியேவோ எறும்புகள் வரும் இடம் முழுவதும் வைத்தால் எறும்புகள் அடுப்பறையை அண்டாது


வினிகர்: 


வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை நன்கு கலக்க வேண்டும்.பிறகு எறும்புகள் வரும் இடங்களில் ஸ்ப்ரே செய்துவிட்டால் எறும்பு தொல்லைக்கு வாய்ப்பு இல்லை. இப்படி வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே எளிதாக எறும்பு தொல்லையிலிருந்து விடுபடலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ


மேலும் படிக்க | ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ