ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா? ஆன்லைனில் டூயூபிளிகேட் பெற்றுக்கொள்ளலாம்

Driving Licence; ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டது என்றால் ஆன்லைனில் டூயூபிளிகேட் அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம்

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2022, 05:07 PM IST
ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா? ஆன்லைனில் டூயூபிளிகேட் பெற்றுக்கொள்ளலாம் title=

உங்கள் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெற, வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த செயல்முறை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். 

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

உங்களின் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அதற்கு ஒரு சில ஆவணங்கள் வேண்டும். படிவம்-2 (LLD), உரிமத்தின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை தேவைப்படும்.

மேலும் படிக்க | ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!

ஆன்லைனில் விண்ணப்பிக்க..

டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://parivahan.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அங்கு'ஆன்லைன் சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது 'தமிழ்நாடு' மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், புதியதாக திறக்கும் பக்கத்தில் ’டிரைவிங் லைசென்ஸ்' பக்கத்திற்குச் சென்று, 'சர்வீசஸ் ஆன் டிஎல் (புதுப்பித்தல்/நகல்/ஏஇடிஎல்/ஐடிபி/மற்றவை)' என்பதைக் கிளிக் செய்யவும். 'Continue' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணையும் உங்கள் பிறந்தநாளையும் உள்ளிடவும். இதற்குப் பிறகு, பெறப்பட்ட டிஎல் விவரங்களிலிருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

டூபிளிகேட் லைசென்ஸ் 

அதன் பிறகு, உங்கள் மாநிலப் பெயர் மற்றும் RTO-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிம விவரங்களை உறுதிசெய்து, பின்னர் 'இஷ்யூ ஆஃப் டூப்ளிகேட் டிஎல்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏன் DL க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை அங்கு நீங்கள் சொல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் முன்பு பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி, அந்த விண்ணப்பத்தையும், ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும். கடைசியாக இந்த இரண்டு ஆவணங்களையும் நீங்கள் RTO அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் சில நாட்களில் வந்துவிடும்.

மேலும் படிக்க | ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News