ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!

தட்கல் முன்பதிவானது ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் நாம் புக் செய்து கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Aug 25, 2022, 10:45 AM IST
  • IRCTC மூலம் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • தட்கல் முறையில் ஒரு நாளிற்கு முன்னதாக டிக்கெட் புக் செய்யலாம்.
  • இதற்கு சிறிது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்.
ரயில் தட்கல் டிக்கெட்கள் உடனே கன்பார்ம் ஆக இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க!   title=

இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்காக 1997-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'தட்கல்' முன்பதிவு முறையானது உடனடியாகவோ அல்லது குறுகிய அறிவிப்பிலோ டிக்கெட்டுகளை புக் செய்து பயணம் மேற்கொள்ள உதவுகிறது.  ரயில் கிளம்பும் நாளை தவிர்த்து ஒரு நாள் முன்னதாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.  இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும், அனைத்து விதமான வகுப்புகளிலும் தட்கல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இந்திய ரயில்வே அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளபடி, தட்கல் முன்பதிவானது ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதில் நீங்கள் முன்பதிவு செய்ய முதலில் https://www.irctc.co.in என்ற இணையதளத்திற்குச் சென்று இந்திய  உங்களுக்கான ஒரு கணக்கை திறக்க வேண்டும்.  அதில் நீங்கள் செயலுள்ள மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.  இப்போது, ​​நீங்கள் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.  அதில் 'மை ப்ரொஃபைல்' பிரிவில் 'மாஸ்டர் லிஸ்ட்' உருவாக்கவேண்டும், அதாவது உங்கள் ப்ரொபைலில் முன்கூட்டியே சேமிக்கக்கூடிய பயணிகளின் பட்டியல் தான் இது.  அதில் நீங்கள் வயது, ஆதார் எண், பெயர் மற்றும் தேவையான பிற தகவல்களை சேர்த்துக்கொள்ளலாம்.  'மை ப்ரொபைல்' பகுதியில் கீழ் பகுதியில் 'மாஸ்டர் லிஸ்ட்' இருக்கும், இதில் தான் நீங்கள் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.  

மேலும் படிக்க | IRCTC Tour: IRCTC டூர் பேக்கேஜ் அறிமுகம்; அனைத்தும் இலவசம்

அதனைத்தொடர்ந்து 'மை ப்ரொபைல்' பக்கத்தில் கீழேயுள்ள டிராவல் லிஸ்டை உருவாக்க வேண்டும்.  அதில் பெயர் மற்றும் விவரங்கள் கேட்கப்படும், பின்னர் மாஸ்டர் லிஸ்டில் இருந்து பயணிகளின் பெயரைத் தேர்ந்தெடுக்க ஒரு ஆப்ஷன் இருக்கும், அதில் நீங்கள் யார் பெயரை சேர்க்க விரும்புகிறீர்களோ அவர்களது பெயரை சேர்த்து கொள்ளலாம்.  இவ்வாறு மாஸ்டர் லிஸ்டில் இருந்து பெயரை எடுப்பது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.  எப்போதும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இந்த செய்ய வேண்டும்.  பின்னர் நீங்கள் இதில் பயணிக்க வேண்டிய ரயிலையும், இறங்கவேண்டிய இடத்தையும் தேர்ந்தெடுங்கள், அதன் பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.  கிரெடிட் கார்டு, யுபிஐ அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! ரயில்வே டிக்கெட்டிலும் மானியமா... அமைச்சர் வெளியிட்ட தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News