ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அஸ்தமிக்கும் போது, அது மனித வாழ்க்கையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அதன்படி கடந்த மார்ச் 14, 2022 திங்கட்கிழமை காலை 05:53 மணிக்குப் புதன் அஸ்தமமானார். தற்போது இன்று அதாவது ஏப்ரல் 12, 2022 செவ்வாய்கிழமை மாலை 07:32 மணிக்கு புதன் மீண்டும் உதயமாகுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் மொத்தம் 30 நாட்கள் அஸ்தம நிலையில் இருந்து இன்று மீண்டும் உதயமாகுகிறார். புதன் கிரகத்தின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவும் வெற்றியும் ஏற்படும்..!! 


மிதுனம்- புதன் கிரகத்தின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். புதன் உங்களின் 11ம் வீட்டில் உதயமாகிறார். இது லாபம் மற்றும் வருமானம் தரும் இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.



கடகம் - கடக ராசிக்காரர்களுக்குப் பத்தாம் வீட்டில் புதன் உதயமாகப் போகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். வெளிநாட்டில் பயணம் மேற்க்கொள்ளலாம். உங்களின் பணி நடை மேம்படும்.



மீனம் - மீன ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன் உதயமாகும். இது பணம் மற்றும் பேச்சு இடம். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீங்கள் நீண்ட காலமாக பணம் செல்ல நினைத்த இடத்துக்கு சென்று வரலாம். புதனின் உதயம் கல்விக்கு சிறப்பு வாய்ந்தது. ஆகையால் மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR