ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் யோகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் சிறப்புமிக்கதாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 08:14 AM IST
  • பொருளாதார பலன்கள் உண்டாகும்
  • உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கு வலுவான யோகம்
  • சனி பகவான் அன்பாக இருப்பார்
ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் யோகம் title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் பார்வையில் ஏப்ரல் மாதம் சிறப்புமிக்கதாக இருக்கும். உண்மையில், இந்த மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாறப்போகிறது. கிரகங்கள் மற்றும் ராசிகளின் மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்கள் மற்றும் ராசிக்காரர்களின் நிலை காரணமாக சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

அதே வேளையில் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகளை சமாளிக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் மாதம் எந்தெந்த கிரகங்களின் ராசி மாறப்போகின்றன, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் இருக்கும் என்பதை அறிவோம்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும் 

ஏப்ரல் 2022 இல் கிரகப் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் ஏப்ரல் 7-ம் தேதி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். மறுநாள் ஏப்ரல் 8 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழைகிறார். இதற்குப் பிறகு ஏப்ரல் 12-ம் தேதி முதல் தலைகீழ் இயக்கத்தில் நகர்கின்றன. ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பெயர்ச்சி ஆகும். ஏப்ரல் 13 ஆம் தேதி, குரு மீன ராசியில் பெயர்ச்சி ஆகுகிரார். ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகுகிரார். ஏப்ரல் 27ல் புதன் ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகுகிரார். மாத இறுதியில், ஏப்ரல் 29 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.

இந்த ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்கள்
மிதுனம்: மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். உண்மையில், சனி தசை பலன் இந்த ராசியில் இருக்கும். இருப்பினும், சனியின் ராசி மாற்றத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு சனி தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். இதனால், தடைபட்ட பணிகள் இம்மாதத்தில் முடிக்கப்படும். பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இது தவிர திருமணத்தில் இருந்து வந்த தடைகளும் நீங்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சாதகமாக இருக்கும். உத்யோகத்தில் சிறப்பு யோகம் உண்டாகும். அரசு வேலை செய்பவர்களின் இடத்தில் மாற்றம் வரலாம். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மகரம்: ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகுகிறார். சனியின் ராசி மாற்றத்தால் நிதிநிலை வலுவடையும். இத்துடன் அதிர்ஷ்டமும் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளும் லாபகரமான வாய்ப்புகளும் அமையும். இருப்பினும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News