காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த மருத்துவமனைகள் பணமில்லா சிகிச்சையை வழங்கவில்லை என்று பல கோவிட் 19 நோயாளிகள் புகார் அளித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் 19 உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் பணமில்லா சிகிச்சையை வழங்குவது இந்த மருத்துவமனைகளின் கடமை என்பதை நினைவூட்டிய IRDAI, "சில மருத்துவமனைகள் கோவிட் -19 (COVID-19) சிகிச்சைக்கு பணமில்லா வசதியை வழங்கவில்லை என்று சில தகவல்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்களுக்கு இந்த வசதி உள்ள போதிலும் அவர்களுக்கு இது வழங்கப்படவில்லை. பாலிசிதாரர்களுக்கு மருத்துவமனைகளுடன் பணமில்லா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இருந்தால், அந்த மருத்துவமனைகள் கண்டிப்பாக கோவிட்-19 சிகிச்சை உட்பட அனைத்து நோய்களுக்கும் பணமில்லா சிகிச்சையை வழங்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறியது.


IRDAI உத்தரவுகளை உறுதிப்படுத்திய நிதி அமைச்சகம், "பாலிசிதாரர்களுக்கு மருத்துவமனைகளுடன் பணமில்லா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இருந்தால், அந்த மருத்துவமனைகள் கண்டிப்பாக கோவிட்-19 சிகிச்சை உட்பட அனைத்து நோய்களுக்கும் பணமில்லா சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதை ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என ட்வீட் செய்தது. 


ALSO READ: COVID தடுப்பூசி பின்விளைவுகளுக்கான மருத்துவ செலவுகள் உங்கள் சுகாதார பாலிசியில் கவர் செய்யப்படுமா?


பொது மற்றும் சுகாதார காப்பீட்டாளர்களுடன் சேவை நிலை ஒப்பந்தங்களில் (SLA) கையெழுத்திட்ட அனைத்து நெட்வொர்க் வழங்குநர்களும் (மருத்துவமனைகள்), எஸ்.எல்.ஏ.வின் ஒப்புக்கொண்ட விதிகளின்படி கோவிட் -19 சிகிச்சை உட்பட பாலிசிதாரர்களுக்கு எந்தவொரு சிகிச்சையிலும் பணமில்லா வசதியை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று IRDAI கூறியது. 


இதன் மூலம், காப்பீட்டு நிறுவனம் / டிபிஏ ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நெட்வொர்க் வழங்குநர்களிடமும் (மருத்துவமனை) பணமில்லா வசதிக்கு தகுதியுள்ள அனைத்து பாலிசிதாரர்களும் பணமில்லா சிகிச்சையின் பயனைப் பெறுவார்கள்.


பட்டியலிடப்பட்ட நெட்வொர்க் வழங்குநர்கள் (மருத்துவமனைகள்) பணமில்லா மருத்துவ வசதிகளை மறுத்தால், பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அனுப்பலாம். காப்பீட்டு நிறுவனங்களின் குறை தீர்க்கும் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை காப்பீட்டாளர்களின் வலைத்தளத்திலிருந்து அல்லது இந்த இணைப்பிலிருந்து பெற முடியும்: 
https://www.irdai.gov.in/ADMINCMS/cms/NormalData_Layout.aspx? page = PageNo ...


மருத்துவமனைகளுடன் தொடர்புகொண்டு, அவர்களுடன் இணைந்துள்ள அனைத்து நெட்வொர்க் வழங்குநர்களுடனும் (மருத்துவமனைகள்) பணமில்லா வசதி சீராக கிடைப்பதை உறுதி செய்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு (Insurance Companies) அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ALSO READ: IRDAI அளிக்கும் அட்டகாசமான வாய்ப்பு: ப்ரீமியத்தில் தள்ளுபடி, வட்டி எல்லாம் கிடைக்கும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR