புதுடெல்லி: பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரிச் சலுகைகளைப் பெறாத பெரும்பாலான தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெள்ளிக்கிழமை உயர்த்தியுள்ளது. மிகவும் பிரபலமான பிபிஎஃப் மற்றும் பெண் குழந்தை சேமிப்புத் திட்டமான, செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவிற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும், 5 சதவீதம் வரையிலான வைப்புத்தொகைகளுக்கான விகிதங்கள், NSC, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவற்றில் கிடைக்கும் வருமானத்திற்கு விதிக்கப்படும் வருமான வரி, 1.1 சதவீத புள்ளிகள் வரை அதிகரிக்கப்பட்டதாக நிதி அமைச்சக அறிவிக்கை கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சில திட்டங்களுக்கு ஒன்பது காலாண்டுகளுக்கு வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிபாய்வு செய்யப்படும். இந்நிலையில் மதிபாய்வுக்கு பிறகு தற்போது, தபால் நிலையங்களில் ஒரு வருட கால வைப்புத்தொகைக்கு 6.6 சதவிகிதம், இரண்டு ஆண்டுகளுக்கு 6.8 சதவிகிதம் என்ற அளவிலும், மூன்று ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 6.9 சதவிகிதம் என்ற அளவிலும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் என்ற அளவில் 8 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில்வட்டி வருமானம் இருக்கும் என  என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேவிபியைப் பொறுத்தவரை, இதன் மூலம் 120 மாதங்களில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு அரசாங்கம் வட்டி விகிதங்களை 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தற்போது, KVP திட்டத்தில் 123 மாத முதிர்வு காலத்துடன் கூடிய திட்டத்திற்கு 7 சதவீத விகிதத்தை வழங்குகிறது.


மேலும் படிக்க | EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை


மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு, 40 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாக 7.1 சதவீதத்தில் வட்டி விகிதம் இருக்கும், அதே நேரத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 20 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7 சதவீதமாக உள்ளது. பெண் குழந்தை சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (பிபிஎஃப்) 7.1 சதவீதமாகவும் மாற்றப்படவில்லை. சேமிப்பு டெபாசிட்கள் ஆண்டுக்கு 4 சதவீதத்தை தொடர்ந்து ஈட்டும்.


மே முதல் ரிசர்வ் வங்கி கடன் விகிதத்தை 2.25 சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது, இதனால் வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ ரேட் அல்லது குறுகிய கால கடன் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. மே மாதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் மற்றும் ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்வுக்குப் பிறகு இது தொடர்ந்து ஐந்தாவது கட்டண உயர்வு ஆகும். மொத்தத்தில் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து பெஞ்ச்மார்க் ரேட்டை 2.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.


மேலும் படிக்க | ஜனவரி 1, 2023: ஜிஎஸ்டி முதல் சிலிண்டர் வரை பல மாற்றங்கள், சாமானியர்களுக்கு சாதகமா? பாதகமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ