EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை

EPFO Pension Rules Change: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2022, 10:57 AM IST
  • இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி.
  • ஓய்வூதிய நிதி அமைப்பு எடுத்த பெரிய முடிவு.
  • சிபிடி-யின் மேல்முறையீட்டை தொடர்ந்து முடிவு எடுக்கப்பட்டது.
EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும். ஓய்வூதிய அமைப்பானது ஓய்வுபெற இன்னும் 6 மாதங்கள் உள்ள ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995) EPS-95 இன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெற அனுமதித்துள்ளது.

சிபிடி-யின் மேல்முறையீட்டால் வந்த முடிவு:

பிடிஐ செய்தியின்படி, தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை மூலம் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு அளித்த பரிந்துரையில் ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வசதியும் உள்ளது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் 65 மில்லியனுக்கும் அதிகமான இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன், 34 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வசதி ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய பலனை நிர்ணயிக்கும் நேரத்தில் அதிக ஓய்வூதியம் பெற உதவும்.

சந்தாதாரர்கள் இப்போது இந்த அனுமதியைப் பெற்றுள்ளனர்:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான சேவை உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மட்டுமே திரும்பப் பெற இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓய்வூதிய அமைப்பு நிதி எடுத்த இந்த பெரிய முடிவிற்குப் பிறகு, இப்போது அந்த சந்தாதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைக்கும். மொத்த சேவை இன்னும் 6 மாதங்கள் இருக்கும் ஊழியர்களும் இனி டெபாசிட் செய்த தொகையை எடுக்க முடியும். 

மேலும் படிக்க | PF சூப்பர் செய்தி!! ஊழியர்களுக்கு ரூ. 40,000 கிடைக்கும், விவரம் இதோ 

பூபேந்திர யாதவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது:

சிபிடி மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட 232-வது கூட்டத்தில், இபிஎஸ்-95 திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, ஓய்வுபெறும் சந்தாதாரர்கள் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க  அனுமதிக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சந்தாதாரர்கள் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இபிஎஸ்-95-ன் கீழ் டெபாசிட்களை திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையின் மீது முடிவு எடுக்கப்பட்டதாக தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது:

அறிக்கையின்படி, இபிஎஃப்ஓ- இன் அறங்காவலர் குழுவும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) யூனிட்களில் முதலீடு செய்வதற்கான மீட்புக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்கான வருமானத்தில் சேர்க்கப்படும் மூலதன ஆதாயங்களை முன்பதிவு செய்வதற்காக 2018 காலண்டர் காலத்தில் வாங்கிய ETF யூனிட்களை மீட்டெடுப்பதற்கும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தவிர, 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப்ஓ- இன் செயல்பாடு குறித்த 69 வது ஆண்டு அறிக்கையும் தொழிலாளர் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | EPFO முக்கிய தகவல்: இதை செய்யாவிட்டால் பெரிய இழப்பீடு செலுத்தவேண்டும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News