வருமான வரி தாக்கல்: புதிய 26 எஸ் (Form-26AS) படிவத்தின் மூலம், வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி (Tax Department) அறிக்கையை மிக எளிதாகவும் துல்லியமாகவும் தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி - CBDT) தெரிவித்துள்ளது. புதிய 26AS படிவம் இந்த ஆண்டிலிருந்து வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும், இது வரி செலுத்துவோரின் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும், அவை பல்வேறு பிரிவுகளின் நிதி பரிவர்த்தனையில் (SFT) குறிப்பிடப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செய்தியும் படிக்கவும் |  TDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.! வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு


இந்த நிதி பரிவர்த்தனைகளில் இருந்து வருமான வரித் துறையால் பெறப்பட்ட தகவல்கள் படிவம் 26AS இன் பகுதி E இல் காட்டப்பட்டுள்ளன. சிபிடிடி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இது வரி செலுத்துவோர் தங்கள் வரியை சரியாக கணக்கிட உதவும், மேலும் அவர்கள் இது பயனுள்ளதாக உணருவார்கள்" என்றார். இது வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றார்.


இந்த செய்தியும் படிக்கவும் |  2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு.....


முன்னதாக, படிவம் 26 ஏஎஸ்ஸில், பான் கார்டுடன் இணைக்கப்பட்ட டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் (TDS and TCS) தவிர வேறு சில வரி தகவல்கள் இருந்தன. ஆனால் இப்போது அது SFT ஐக் கொண்டிருக்கும், இதனால் வரி செலுத்துவோர் அனைத்து பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.


இந்த செய்தியும் படிக்கவும் |  ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2% வரி வசூலிக்கப்படும்


ரொக்க வைப்பு, பணம் திரும்பப் பெறுதல், ரியல் எஸ்டேட் விற்பனை, கிரெடிட் கார்டு பணவர்த்தனை, பங்குகளை வாங்குதல், பரஸ்பர நிதி, ஷேர்மார்க்கெட் பங்கு வாங்குதல், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பயன்படுத்தப்பட்ட வங்கி ரொக்கம், வங்கிகள், பரஸ்பர நிதிகள், பத்திர வெளியீட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் நிதி பதிவேடுகள் குறித்த தகவல் பதிவாளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்கு 2016 ஆம் ஆண்டு முதல் கிடைக்கின்றன. இப்போது இந்த தகவல்கள் அனைத்தும் படிவம் 26AS இல் தோன்றும்.


இந்த செய்தியும் படிக்கவும் |  TDS சமர்ப்பிப்பதில் தாமதம் செய்ததால் ஒரு வருட தண்டனை வழங்கப்பட்டது


படிவம் 26AS இன் பகுதி E பரிவர்த்தனை வகை,யில்,  நிதி பரிவர்த்தனை மேற்கொண்டவரின் பெயர், பரிவர்த்தனை தேதி, தொகை, கட்டணம் செலுத்தும் முறை போன்ற முழுமையான விவரங்களை வழங்கும். "இது நேர்மையான வரி செலுத்துவோருக்கு எளிதாக இருக்கும். அதேநேரத்தில் வருமானம் குறித்து மறைப்பபவர்களுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்க முடியும்" என்று அதிகாரி கூறினார்.


இந்த செய்தியும் படிக்கவும் |  Tax Refund பெற்ற 10 லட்சம் பேர்; எப்படி இங்கே படிக்கவும்....