TDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.! வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், தனிநபர் வருமான வரித்துறை சான்றிதழை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2020, 09:30 PM IST
  • லாக்-டவுன் அமலில் இருக்கும் நிலையில் வருமான வரித்துறை மக்களுக்கு நிவாரணம் அளித்தது
  • படிவம் 15 ஜி மற்றும் 15 எச் ஆகியவற்றை நிரப்புவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இதற்கு பிறகும் நீங்கள் தாமதம் செய்தால் டி.டி.எஸ் சலுகை வழங்கப்படாது.
TDS வரி கட்டுப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.! வருமான வரித்துறை இந்த முக்கியமான அறிவிப்பு title=

புதுடெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், நடப்பு நிதியாண்டில் 15 ஜி மற்றும் 15 எச் படிவங்களை நிரப்ப தனி நபர்களுக்கு வருமான வரித்துறை ஜூன் 30 வரை காலத்தை நீட்டித்துள்ளது. வரி விலக்கிலிருந்து விலக்கு பெற இந்த படிவங்கள் நிரப்பப்பட வேண்டும். கோவிட் -19 தாக்கம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நேரடி ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட 15 ஜி மற்றும் 15 எச் படிவங்கள் 2020 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி - CBDT) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாள் சிலருக்கு சரியான நேரத்தில் படிவங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்று சிபிடிடி தெரிவித்துள்ளது. 

படிவங்களை சமர்ப் பிக்கவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், அவற்றின் டி.டி.எஸ் (TDS) கழிக்கப்படும். இதுபோன்ற எந்தவொரு துன்புறுத்தலையும் மக்கள் எதிர்கொள்ளக்கூடாது என்று தான் மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

2019-20 நிதியாண்டில் ஒரு நபர் செல்லுபடியாகும் 15 ஜி மற்றும் 15 எச் படிவத்தை வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் சமர்ப்பித்திருந்தால், அவை 2020-21 நிதியாண்டில் 2020 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.  மூத்த குடிமக்களுக்கு படிவம் 15 எச் (15H) சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம். அதேபோல  படிவம் 15 ஜி (15G) வருமானம் விலக்கு வரம்பை விட குறைவாக உள்ளவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Trending News