Best Electric Cars: ஒரே சார்ஜில் நீண்ட தூர பயணம், சூப்பர் கார்களின் பட்டியல் இதோ
எலக்ட்ரிக் கார் அல்லது எஸ்யூவி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரவாதம், இலவச சேவை, சாலை தள உதவி உட்பட பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
Best Electric Cars: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், வாகனத்தை ஓட்டுவதற்கே யோசிக்க வேண்டிய சூழல் உள்ளது. எரிபொருளுக்கான பட்ஜெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்புக்கான ஒரு முக்கிய மாற்றாக மின்சார வாகனங்கள் இருக்கும்.
தற்போது, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் மின்சார எஸ்யூவிகளை (Electric SUV) இந்தியாவில் வழங்குகின்றன. மிகவும் வலுவான செயல்திறன் மற்றும் அம்சங்களுடன் இவற்றின் உதவியுடன் நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க முடியும். அத்தகைய சிறப்பு அம்சம் வாய்ந்த எஸ்யூவி-க்களை பற்றி இங்கே காணலாம்.
கோனா எலக்ட்ரிக்
கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai ) தனது மின்சார எஸ்யூவி கோனாவை இந்தியாவில் விற்பனை செய்கிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த எஸ்யூவி, முழு சார்ஜில், 452 கிலோமீட்டர் வரை பயணிகும். இதன் விலை ரூ .23,77,900 (Electric Electric Automatic Premium) மற்றும் ரூ .23,96,649 ஆகும்.(Electric Electric Automatic Premium Dual tone). (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து)
டாடா நெக்ஸன் இ.வி.
டாடா மோட்டார்ஸின் (Tata Motors) மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸன் மின்சார மாறுபாட்டிலும் கிடைக்கிறது. இந்த காரை மாநில அரசிடமிருந்து நல்ல மானியத்தில் வாங்கலாம். சமீபத்தில் இந்த எஸ்யூவியின் டார்க் மாறுபாடும் வந்துவிட்டது. இதன் விலை ரூ .13.99 லட்சம் முதல் ரூ .16.85 லட்சம் வரை உள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 312 கி.மீ. வரை செல்லும். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து)
ALSO READ: Kia EV6: அசத்தும் அம்சங்களுடன் அறிமுகமாகிறது மின்சார கார், 18 நிமிடங்களில் 80% சார்ஜ்!!
MG Z S EV
எம்ஜி மோட்டரின் இந்த மின்சார எஸ்யூவி தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. இது முழு சார்ஜில் 340 கி.மீ வரையிலான பயணத்தை மேற்கொள்கிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆரம்ப விலை ரூ .20.88 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 44.5 கிலோவாட் பேட்டரி கொண்டுள்ளது.
டாடா டிகோர் இ.வி.
டாடா மோட்டார்ஸின் மற்றொரு மின்சார கார் (Electric Car) டாடா டிகோர் இ.வி. இது குறைந்த பட்ஜெட்டில் உள்ளது. இதை ரூ .59.58 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இது முழு சார்ஜில் 142 கி.மீ வரை பயணிக்கிறது. இது 21.5 கிலோவாட் பேட்டரி கொண்டுள்ளது.
மஹிந்திரா இ-வெரிட்டோ
குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பினால், உங்களுக்கான மற்றொரு நல்ல தேர்வு மஹிந்திரா இ-வெரிட்டோ. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை ரூ .10.11 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த கார் முழு சார்ஜில் 140 கி.மீ வரை செல்லும்.
நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்குகின்றன
எலக்ட்ரிக் கார் அல்லது எஸ்யூவி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரவாதம், இலவச சேவை, சாலை தள உதவி உட்பட பல நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் போலவே, இந்த மின்சார கார்களும் செயல்படுகின்றன.
ALSO READ: Cheapest Electric Solar Car: பெட்ரோல் பற்றிய கவலை வேண்டாம், சூரிய ஒளி இருந்தால் போதும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR