Kia EV6: அசத்தும் அம்சங்களுடன் அறிமுகமாகிறது மின்சார கார், 18 நிமிடங்களில் 80% சார்ஜ்!!

நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2021, 03:33 PM IST
  • Kia-வின் Kia EV6 என்ற இந்த மின்சார கார் விரைவில் சந்தையில் வரவுள்ளது.
  • Kia EV6 இரண்டு மின்சார மோட்டார்களின் உதவியுடன் 577 ஹெச்பி பவரை உருவாக்குகிறது.
  • 18 நிமிடங்களில் EV6, 10% முதல் 80% சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடுகிறது.
Kia EV6: அசத்தும் அம்சங்களுடன் அறிமுகமாகிறது மின்சார கார், 18 நிமிடங்களில் 80% சார்ஜ்!!  title=

Electric car Kia EV6: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் அனைவரும் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. Kia-வின் மினசார கார் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். Kia EV6 என்ற இந்த மின்சார கார் விரைவில் சந்தையில் வரவுள்ளது. மிகக்குறைந்த நேரத்திலேயே இது மிக அதிக வேகத்தை எட்டுகிறது. தென் கொரிய நிறுவனத்தின் இந்த கார் நிமிடங்களில் சார்ஜ் ஆகி விடும். 

E-GMP தளத்தில் உருவாக்கம்

Kia EV6 பிரத்யேக தளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மின்சார கார்களுக்காக (Electric Car) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட E-GMP  இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளம் தான் Hyundai IONIQ 5 இல் பயன்படுத்தப்படும்.

3.5 வினாடிகளில் 100 கி.மீ வேகம்

Kia EV6 இரண்டு மின்சார மோட்டார்கள் உதவியுடன் 577 ஹெச்பி பவரை உருவாக்குகிறது. இந்த எஸ்யூவி 0-லிருந்து 100 கிமீ வேகத்தை பிடிக்க வெறும் 3.5 வினாடிகளே ஆகும். EV6 இன் நீளம் 4,680 மிமீ, அகலம் 1,880 மிமீ மற்றும் உயரம் 1,550 மிமீ. இந்த காரின் வீல்பேஸ் 2,900 மி.மீ ஆகும்.

ALSO READ: OLA Electric Scooter: இந்திய சாலைகளில் கலக்க வருகிறது, விரைவில் அறிமுகம், விவரம் இதோ

18 நிமிடங்களில் 80% சார்ஜ்

இந்த காரில், 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 18 நிமிடங்களில் EV6, 10% முதல் 80% சதவீதம் வரை ஆகி விடுகிறது. இந்த மின்சார எஸ்யூவியை (Electric SUV) வெறும் 4 நிமிடம் 30 வினாடிகள் சார்ஜ் செய்தால் போதும், நீங்கள் அதில் 100 கி.மீ தூரம் வரை ஓட்டுவதற்கான சார்ஜ் செய்துவிடலாம். 

சார்ஜ் ஆனவுடன் 510 கி.மீ. ரேஞ்சைக் கொடுக்கும்

கூற்றுப்படி, இந்த மின்சார எஸ்யூவியின் வரம்பு 510 கி.மீ. ஆகும். Kia EV6 577 HP அதிகபட்ச பவரை உருவாக்க முடியும். கூடவே இது சிங்கிள் சார்ஜில் 510 கி.மீ ரேஞ்சை அளிக்கிறது. 

ஐரோப்பாவில் ஆர்டர்கள் வருகின்றன

நிறுவனம் இந்த மின்சார காரான கியா இவி 6 ஐ பிப்ரவரி 2021 இல் அறிமுகப்படுத்தியது. தகவல்களின்படி, நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கக்கூடும். உற்பத்தி தொடங்கியதும், இந்த காரின் விநியோகமும் மீண்டும் தொடங்கப்படும். விற்பனை தொடங்கும் முன்பே Kia EV6 -க்கு ஐரோப்பாவில்  அதிகமான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ALSO READ: Bajaj Chetak vs TVSiQube: உங்கள் பணத்துக்கு நல்ல மதிப்பை அளிக்கும் Electric scooter எது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News