புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தனது மிக மலிவான இரு சக்கர வாகனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. பல முன்னணி மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக ஹோரோ நிறுவனம் இந்த பைக்கை கம்பீரமாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீரோவின் (Hero) மிக மலிவான பைக்காக இந்த பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், சமீபத்தில் அறிமுகம் செய்த Hero HF 100-ல் பல வித சிறப்பம்சங்கள் உள்ளன. 


Hero HF 100-ன் விலை விவரம்


ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Hero HF 100-ன் விலை ரூ .49,400 ஆகும் (எக்ஸ்ஷோரூம், டெல்லி). சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Hero HF, Hero HF டீலக்ஸ் மாடல் தொடரின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


Hero HF 100-ன் போட்டியாளர்கள் யார்


ஹீரோ மோட்டோகார்ப், இந்த அறிமுகத்தின் மூலம், தனது போட்டியாளர்களான ரூ.44,890  (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை கொண்ட Bajaj CT100 மற்றும் ரூ.55,660 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை கொண்ட TVS Sport ஆகியவற்றுக்கான போட்டியாக சந்தையில் இறங்கியுள்ளது. 


ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியல்!


Hero HF 100-ன் அம்சங்கள்


ஹீரோ மோட்டோகார்ப் ஒற்றை சிலிண்டர் 97.2 சிசி ஏர்-கூல்ட் மற்றும் எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சினுடன் Hero HF-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த இரு சக்கர வாகனம் 8,000 ஆர்பிஎம்மில் 7.91 bhp ஆற்றலை உருவாக்குகிறது. மேலும் 5,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm டார்க் வெளியீட்டை உருவாக்குகிறது. Hero HF-இன் இன்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கத்தில் தொலைநோக்கி ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் உறிஞ்சிகள் உள்ளன. Hero HF 110 கிலோ எடை கொண்டது. பிரேக்கிங் செயல்முறை முன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் அலகுகளைக் கொண்டுள்ளது.


Hero HF-ன் வண்ண ஆப்ஷன்கள்


இந்த பைக் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள மிக அடிப்படையான பயணிகள் இரு சக்கர (Two wheeler) வாகனங்களில் ஒன்றாகும். நிறுவனம் தற்போது Hero HF -ஐ பிளாக் வித் ரெட் என்ற ஒரே ஒரு வண்ணத்தில்தான் அறிமுகப்படுத்தியுள்ளது.  


அனைவரும் வாங்கும் விலையில் இருப்பதால், இந்த பைக்கிற்கு சந்தையில் நல்ல தேவை இருக்கும் என நிறுவனம் நம்புகிறது. குறைந்த விலையில், பல நவீன அம்சங்களுடன் வரும் இந்த பைக் கண்டிப்பாக இந்தியாவின் சாலைகளில் கூடிய விரைவில் அதிக எண்ணிக்கையில் காணப்படலாம்!!


ALSO READ: Electric scooter: Bajaj Chetak, TVS iQube, Ola scooter இடையே கடும் போட்டி: எது best?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR