கொரோனா காலத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதை பலரும் தவிர்க்க விரும்புகிறார்கள். ஏனென்றால் இப்போது தொற்றுநோய் காரணமாக, பண நெருக்கடி உள்ளது. அனைவரது நிதி நிலையும் மோசமடைந்துள்ளது. ஆகையால், பலரால் விலையுயர்ந்த வாகனங்களை வாங்க முடிவதில்லை. மேலும் பெட்ரோல் டீசல் விலையும் மிக அதிகமாக உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், வானங்களை வாங்குவது மிக பெரிய விஷயமாக இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தற்போது பல சலுகைகளுடன் கார்களை தற்போது வாங்க முடியும். மிகக் குறைந்த விலையில் தற்போது கார்களை (Cars) நாம் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்லலாம்.


இப்படிப்பட்ட கார்களை வெறும் மூன்று லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும். அவை குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமல்லாமல், திறன் வாய்ந்த கார்களாகவும் இருக்கின்றன. இந்த பட்டியலில் எந்தெந்த கார்கள் இருக்கின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.


ரெனால்ட் க்விட்


நீங்களும் மலிவு விலையில் காரை வாங்க திட்டமிட்டிருந்தால், ரெனால்ட் (Renault) க்விட் உங்களுக்கான நல்ல தேர்வாக இருக்கும். 3 லட்சத்திற்கு கீழ் கார் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதன் விலை ரூ .2.83 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.


ALSO READ: Honda Alert: கார் வாங்கப்போறீங்களா? அடுத்த மாதம் கார் விலை அதிகரிக்கும்!!


க்விட்டின் புதிய மாடல் முந்தைய மாடலிலிருந்து மேம்பட்ட மாடலாக உள்ளது. பல ஸ்டைலான அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது 799 சிசி பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் லிட்டருக்கு 25.17 கி.மீ. மைலேஜ் கிடைக்கிறது. புதிய க்விட்டில், அனைத்து வகைகளிலும் டிரைவர் சைட் ஏர்பேக், EBD-யுடன் ABS, ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் நினைவூட்டல் செயல்முறை மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.


மாருதி ஆல்டோ


சிறிய கார்கள் பற்றி பேசும்போது, மாருதி சுசுகி (Maruti Suzuki) ஆல்டோ பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. ரூ .3 லட்சத்துக்கும் குறைவான விலையில் காரை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 


இந்த காரின் விலை ரூ .2.89 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. ஆல்டோ லிட்டருக்கு சுமார் 22.5 கி.மீ. மைலேஜ் அளிக்கின்றது. இதில் 796 சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. EBD-யுடன் ABS, டிரைவர் சைட் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் ஆறு வண்ணங்களில் வருகிறது.


தட்சன் ரெடி-கோ


Datsun Redi-Go-வின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கார் வாங்குவதற்கான உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த கார் உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும். இந்த காரின் விலை ரூ .2.80 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. 


இந்த ஆடம்பர காரில், 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது. இது 54 பிஎஸ் பவரை உருவாக்குகிறது. இந்த கார் 22.7 கி.மீ. வரையிலான மைலேஜ் தரும். EBD-யுடன் ABS, டிரைவர் சைட் ஏர்பேக், சீட் பெல்ட் நினைவூட்டல், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வேக எச்சரிக்கை அமைப்பு ஆகியவை இதில் கிடைக்கும்.


ALSO READ: வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR