கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டும் என ஆசை இருப்பது சகஜம்தான். ஒரு குழந்தை அறிவாளியாக பிறக்க பல காரணங்கள் இருந்தாலும், தாய் செய்யக்கூடிய ஒரு வேலையும் இதில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் டி (Vitamin D) ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகவும் உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமினாகவும் உள்ளது. தாய் உட்கொள்ளும் வைட்டமின் டி அவரது குழந்தையை கருப்பையில்அடைந்து, அதன் மூளை வளர்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை சீர்படுத்த உதவுகிறது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் டி-யின் அளவைப் பொறுத்து அவரது குழந்தையின் நுண்ணறிவு (IQ) மாறுபடக்கூடும் என்பதைக் காட்டுகிறது.


கர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வைட்டமின் டி குழந்தைகளை அதிக புத்திசாலிகளாக்குகிறது


ஒரு தாய் தனது கர்ப்ப காலத்தில் (Pregnancy) அதிக வைட்டமின் டி-ஐ உட்கொண்டால், அது குழந்தையின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும் குழந்தையின் நுண்ணறிவை அதிகரிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் பொருள் என்னவென்றால், கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் நுண்ணறிவு அதிகரிக்கும்.


வைட்டமின் டி குறைபாடு பொது மக்களுக்கு இடையில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடையே பொதுவானதாக உள்ளது என்பதையும் ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஆனால் கறுப்பின பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளனர், ஏனெனில் சருமத்தின் இயற்கையான நிறமி (மெலனின் நிறமிகள்) இந்த வைட்டமின்களின் உற்பத்தியைக் குறைக்கிறது.


ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?


மெலனின் நிறமி சூரியனின் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. ஆராய்ச்சியின் படி, கருப்பு கர்ப்பிணிப் பெண்களில் வைட்டமின் டி அளவுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைவு காணப்பட்டது. 46 சதவீத கர்ப்பிணிப் பெண்களில், குறிப்பாக கறுப்பின பெண்களில் வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்காலத்திற்கு முக்கியமானவை -  விஞ்ஞானிகள்


நுண்ணறிவு தொடர்பான பல காரணிகளை மனதில் வைத்து, விஞ்ஞானிகள், கர்ப்ப காலத்தில் பெண்களில் அதிக அளவு வைட்டமின் டி மற்றும் 4-6 வயது குழந்தைகளில் அதிக நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இடையே ஒரு உறவு இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், இத்தகைய பகுப்பாய்வு ஆய்வுகள் மூலம் காரணத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் முடிவுகள் இன்னும் உறுதியான சான்றுகளைக் கொண்டிருக்கும். இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் அது செய்யப்படும்.


வைட்டமின் டி குறைபாட்டை சமாளிக்க முடியும் என்றும், இதன் எளிதான தீர்வு கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்வது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இது தவிர, மீன், முட்டை (Eggs) மற்றும் வலுவூட்டப்பட்ட பால் ஆகியவற்றிலிருந்து வைட்டமின் டி-ஐ உடலில் சேர்க்கலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் டி-யின் சரியான அளவு குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 


ALSO READ: கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR