கொரோனா தடுப்பூசி கோவாக்சின் 2021 ஆம் ஆண்டுக்குள் வர வாய்ப்பில்லை என ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், ஜைகோவ்-டி (COVAXIN, ZyCov-D) ஆகிய மருந்துகளின் பரிசோதனை என்பது கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது. 


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பத்திரிக்கை தகவல் பணியக வளைதள பக்கத்தில் (Press Information Bureau website). வெளியிடப்பட்ட தகவலை அதிரடியாக திருத்தி உள்ளது. "2021 க்கு முன்னர் கோவிட் -19 தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை" என்று வெளியிட்ட தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நீக்கி உள்ளது.


அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது..... "உலகளவில் கொரோனாவை தடுக்க 140-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் AZD1222 தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமத்தைப் பெற்றுள்ளது. 


READ | அடுத்த ஒரு வருடத்திற்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு..!


இதையடுத்து, வாஷிங்டனின் கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் MRNA-1273 தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவின் இரு உற்பத்தியாளர்களுடன் தடுப்பு்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்கெனவே செய்துள்ளன. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து உலகில் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம். ஆனால், இந்திய உற்பத்தியாளர்கள் தலையீடு இல்லாமல் தேவையான அளவு தயாரிப்பதில் சாத்தியமில்லை. இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுக்களும் ஈடுபட்டுள்ளன.


புனேவில் உள்ள இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் ஹைதராபாத்தின் ICMR நிறுவனமான போன்ற ஆறு இந்திய நிறுவனங்கள் COVID-19_க்கான தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. தற்போது, உருவாக்கபட்டுள்ள 2 இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின், ஜைடஸ் காடில்லா நிறுவனத்தின் ZyCov-D ஆகிய தடுப்பு மருந்துகள் கொரோனா-வை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கமாக பார்க்கப்படுகின்றன. இந்த தடுபூசிக்களை இரண்டு கட்ட மனித பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் அனுமதி வழங்கியுள்ளது. ஒரு தடுப்பூசி முழுமையாக தயாராக 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்பதால், இந்தியாவில் தடுப்பூசில் எதுவும் 2021 ஆம் ஆண்டுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தயாராக இருக்க வாய்ப்பில்லை" என அதில் குறிப்பிட்டுள்ளார்.