அடுத்த ஒரு வருடத்திற்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு..!

கொரோனாவை பரவுவதை கட்டுப்படுத்த அரசு வெளியிட்டுள்ள நடவடிக்கைகளை அடுத்தாண்டு ஜூலை வரை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு அறிவிப்பு!!

Last Updated : Jul 5, 2020, 09:06 PM IST
அடுத்த ஒரு வருடத்திற்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு..! title=

கொரோனாவை பரவுவதை கட்டுப்படுத்த அரசு வெளியிட்டுள்ள நடவடிக்கைகளை அடுத்தாண்டு ஜூலை வரை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலமாக கேரளா இருந்தது. ஆனால், அம்மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இந்நிலையில், அங்கு மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு நாள்தோறும் தற்போது 100க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், பாதிப்புகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஓராண்டுக்கு பொதுவெளிகளில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பணியிடங்களிலும் முகமூடிகள் அணிய வேண்டும். மக்கள் அனைவரும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும். 

திருமணங்களில் 50 பேர் வரை மற்றும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்த விதமான சமூகக் கூட்டங்கள், ஒன்றுகூடுதல், ஊர்வலங்கள், தர்ணாக்கள், சபைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது. இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பவர்கள் 10 பேருக்கு மேல் இருக்க கூடாது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களை காணவும்... 

  • முக கவசம் / முகமூடி: வாகனங்கள், பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் அனைவரும் வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும். 
  • சமூக இடைவெளி: பொது இடங்களில் அனைவரும் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 
  • அரசின் அனுமதியில்லாமல், யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது. தர்ணா, போராட்டம், போன்றவைக்கு தடை விதிக்கப்படுகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம்.
  • திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் 50க்கு மேல் பங்கேற்க கூடாது. பங்கேற்கும் அனைவரும் மாஸ்க், சானிடைசர் அணிவதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
  • இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தால், அரசு வகுத்த சிறப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா உள்ளதாக சந்தேகப்படும் நபர் இறந்தாலும், அவர்களுக்கும், கொரோனாவால் இறக்கும் நபருக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், வாடிக்கையாளருக்கு, கடை உரிமையாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பாஸ் தேவையில்லை, ஆனால் பயணிகள் ஜக்ரதா இ-பிளாட்பாரத்தில் பதிவு செய்ய வேண்டும். 
  • பொது இடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Trending News