கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூளையில் பாதிப்பு ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட அண்மை ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பக்கவாதம், மனநோய், நினைவாற்றல் குறைபாடு போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


பிரிட்டன் முழுவதிலும் இருந்து COVID-19 நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 125 பேரின் தகவல்கள் அந்த முதற்கட்ட ஆய்வில் ஆராயப்பட்டன. அவர்களில் பெரும்பாலானோருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாக ஆய்வு குறிப்பிட்டது. Lancet மருத்துவ சஞ்சிகையின் உளவியல் இதழ், அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 


பிரிட்டனில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 125 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளில், கொரோனா வைரஸ் மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மூளையை தாக்குவதால், பக்கவாதம், மூளைவீக்கம். சைக்கோசிஸ், டிமென்ஷியா உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுவதாக இந்த ஆய்வை நடத்திய லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி பேராசியர்கள் தெரிவித்ததாக லான்செட் கூறியுள்ளது. 



கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பியல் பாதிப்புகள் குறித்து விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள், சிகிச்சை விதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய உதவும் என ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் சாரா பெட் (Sarah Pett) தெரிவித்துள்ளார்.


READ | எச்சரிக்கும் Paytm!! ஒரு சின்ன தவறு... உங்கள் வங்கி பணம் காலி


கோவிட் -19 உள்ளவர்களில் மூளை சிக்கல்களை நன்கு புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சி தேவை, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆய்வில் உள்ள நோயாளிகள் சிறப்பு மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர், எனவே மிகவும் மோசமான நிகழ்வுகளை இது குறிக்கிறது. சீனாவில் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆரம்பத்தில் வைரஸ் நிமோனியாவுக்கு ஒரு காரணியாகக் காணப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது பல எதிர்பாராத மற்றும் சில நேரங்களில் ஆபத்தான வழிகளில் உடலை சேதப்படுத்தும் என்று கருதப்படுகிறது.