எச்சரிக்கும் Paytm!! ஒரு சின்ன தவறு... உங்கள் வங்கி பணம் காலி

Paytm KYC என்ற பெயரில், மோசடி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பிரபலமான ரீசார்ஜ் மற்றும் கட்டண பயன்பாடு Paytm அதன் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 26, 2020, 04:46 PM IST
  • மோசடி செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு Paytm நிறுவனம் அறிவுரை.
  • Paytm போன்ற போலி வலைத்தளத்தை உருவாக்குவதன் மூலம் மோசடி.
  • Paytm ஒருபோதும் KYC SMS ஐ ஆன்லைனில் அனுப்புவதில்லை.
  • மோசடி செய்பவர்கள் KYC என்ற பெயரில் உங்களிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கிறார்கள்.
எச்சரிக்கும் Paytm!! ஒரு சின்ன தவறு... உங்கள் வங்கி பணம் காலி title=

புது டில்லி: Paytm KYC என்ற பெயரில், மோசடி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பிரபலமான ரீசார்ஜ் மற்றும் கட்டண பயன்பாடு Paytm அதன் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. KYC மற்றும் Paytm கணக்கு முடக்க வேண்டுமா என்ற பெயரில் மோசடி செய்பவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நிறுவனம் கேட்டுள்ளது. நீங்கள் Paytm பயன்படுத்துபவர்களாக இருந்தால், இந்த விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நொடிகளில் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் காலியாக வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்ற எஸ்எம்எஸ் (SMS) மூலம் கவனமாக இருங்கள்:
- உங்கள் Paytm KYC காலாவதியானது 
- அல்லது அதை புதுப்பிக்க வேண்டும் 
- அல்லது உங்கள் கணக்கு 24 மணி நேரத்தில் நிறுத்தப்படும்

மோசடி நடப்பது இப்படித்தான்:
மோசடி செய்பவர்கள் KYC சம்பந்தமாக எஸ்எம்எஸ் அனுப்பி அல்லது தொலைபேசி மூலம் உங்களை தொடர்புக்கொண்டு, உங்களிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், அனிடெஸ்க் (Anydesk) போன்ற பயன்பாடு பயனர்களிடமிருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. Anydesk, TeamViewer அல்லது QuickSupport போன்ற பயன்பாடு நிறுவப்பட்ட பின் 9 இலக்க குறியீடு உருவாக்கப்படுகிறது. இந்த குறியீட்டு எண்ணை மோசடி கும்பல் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் குறியீட்டு எண்ணை கொடுத்தவுடன் ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி ஹேக் செய்து, அவர்கள் தொலைபேசித் திரையை எளிதாகக் கண்காணிபார்கள். மோசடி செய்பவர்கள் இதன் மூலம் Paytm மற்றும் மொபைல் வங்கி பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெற்று வங்கி மற்றும் கிரெடிட்கார்டு கணக்கில் உள்ள பணம் அனைத்தும் எடுத்துக்கொண்டு விடுவார்கள்.

Paytm போன்ற போலி வலைத்தளத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் கடவுச்சொல் மற்றும் OTP ஐ அறிந்து கொள்வது மோசடி செய்பவர்களின் மற்றொரு வழி. அதாவது www.paytmuser.com, www.kycpaytm.in மற்றும் jn29832.ngrok.io/index.php போன்ற வலைத்தளத்தை உருவாக்கி உள்ளனர். ஆனால் அவை உண்மையில் போலியானவை. பயனர்கள் இந்த இணையதளத்திற்கு செல்லும் போது ஹேக்கர்கள் உங்கள் தகவல்களை பெறுகிறார்கள்.

இந்த மோசடியை தவிர்க்க, இதை மனதில் கொள்ளுங்கள்:
Paytm KYC எப்போதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடை மூலமாகவோ அல்லது அவர்களின் பிரதிநிதி மூலமாகவோ செய்யப்பட வேண்டும்.
Paytm ஒருபோதும் KYC SMS ஐ ஆன்லைனில் அனுப்புவதில்லை.
Paytm உங்களை எப்போது வேண்டுமானாலும் அழைத்து எந்த பயன்பாட்டையும் நிறுவும்படி கேட்கும்.
Paytm குறைந்தபட்ச KYC க்கு எந்த SMS / மின்னஞ்சலையும் அனுப்பாது.
கேஷ்பேக்கிற்காக நிறுவனம், உங்களுக்கு எந்த இணைப்பையும் அனுப்புவது இல்லை உங்கள் கேஷ்பேக் நேரடியாக உங்கள் Paytm கணக்கில் அல்லது Paytm வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
Paytm ஊழியர்கள் உங்கள் PIN, OTP, கடவுச்சொல், கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு, டெபிட் / கிரெடிட் கார்டு CVV அல்லது PIN அல்லது வங்கி விவரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்
KYC-க்கு Paytm முகவர்கள் வரும்போது, ​​அவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்கப்படும்.
Paytm.com ஐத் தவிர வேறு எந்த URL இல் விவரங்களை வைக்க Paytm ஒருபோதும் கேட்காது.
இந்த வகை மோசடிகளிலிருந்து விலகி இருங்கள்.

Trending News