கிரிப்டோகரன்சி பில்: உலகளவில் மிகவும் சர்ச்சையான ஒரு டாபிக் கிரிப்டோ கரன்சி (Cryptocurrency). ஒவ்வொரு நாட்டிலும் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரன்ஸிக்கு மாற்றாக உலகளாவிய தொழில்நுட்பத்துடன் உருவானதுதான் முதல் கிரிப்டோ கரன்ஸியான பிட்காயின் (Bitcoin). இதன் அதிகாரம் ஒட்டுமொத்தமும் மக்களிடமே இருக்கும். எந்த ஒரு நிறுவனமும், அரசாங்கமும் இதன் உரிமைகளில் தலையிட முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிட்காயினில் தொடங்கிய கிரிப்டோ கரன்ஸி பயணம், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. உலகின் பல மூலைகளின் கரன்சிகள் உருவாகின்றன. அதில் சில நிலைக்கின்றன. பல வந்த வேகத்தில் மதிப்பிழந்து விடுகின்றன. அதேபோல கிரிப்டோ கரன்சி சில புதியவர்களை பணக்காரர்களாக ஆக்கியிருக்கிறது. பலரை ஏழையாக்கியிருக்கிறது.


இந்த நிலையில் தான் கிரிப்டோ ஒழுங்குமுறை தொடர்பான மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபமாக கிரிப்டோவை பரிவர்த்தனை செய்யும் எக்ஸ்சேஞ்ச்கள் இந்தியாவில் வெகுவேகமாக பெருகிவிட்டன. அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இயங்குகிறார்கள். அவர்களிடம் கிரிப்டோ வியாபாரிகள் கொடுக்கும் பணம் முழுவதற்கும் எக்ஸ்சேஞ்ச்களே பொறுப்பு. இதனை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறது.


ALSO READ | Cryptocurrency: குளிர்கால கூட்டத் தொரில் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய முடிவு?


லோக்சபா இணையதளத்தில் அதிகாரப்பூர்வ "டிஜிட்டல் கரன்சி" (Digital Currency) ஒழுங்குமுறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், தனியார் கரன்ஸிகளை தடை செய்வது குறித்தும் அல்லது அதில் பாதுகாப்பான தொழில்நுட்பத்தை மட்டும் ஏற்றுக் கொள்வது குறித்தும் மசோதா பேசும் என்று கூறியுள்ளது. மேலும் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் கரன்ஸி ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஒன்றிய அரசு முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.



இந்த முன்னறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கரன்சிகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. 10% முதல் 30% வரை இந்தியாவில் கரன்சிகள் மதிப்பு வீழ்ச்சியை கண்டுள்ளன. கிரிப்டோ வைத்திருப்பவர்கள் ஒன்றிய அரசின் அறிவிப்பால் பயத்தில் அதனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


மற்றொருபுறம் கிரிப்டோ கரன்ஸி யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு தொழில்நுட்பம். ஒன்றிய அரசு தடை விதித்தாலும் அது சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்படும் என்பதால் அரசு அதன் மீதான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டுமே வெளியிடும் என்றும் எக்ஸ்சேஞ்ச்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பொருளாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு திட்டமிடவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


ALSO READ | இந்தியாவின் முதல் பிட்காயின் ATM-யை நிறுவியவர் கைது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR