இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  தொழில்நுட்பம் (Technology) ஒருபக்கம் பல்கிப் பெருகி வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் ஒரு பக்கம் பெருகி வருகிறது.  அந்த வகையில் பழைய மோசடி ஒன்று மீண்டும் உயிர் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  ஹனிட்ராப் மோசடியில் சிக்கிய ஜோதிடர்! 49 லட்சம் பறிகொடுத்த சோகம்!


இதில் அதிகம் மோசடிக்கு ஆளாக்கப்படுபவர்கள் யாரென்றால் தங்களது கணினிகளில் (internet) ஆபாச படங்களை பார்ப்பவர்கள் தான். சமீபத்திய அறிக்கையின்படி, ஆபாச வீடியோக்களைப் பார்க்கும்போது அவர்களின் திரையில் "browser has been locked" என்ற போலியான pop-up notification வருகிறது.  இத்தகைய மோசடி குறித்து இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் மக்களை எச்சரிக்கும் விதமாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 



இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹரியாவின் ட்விட்டரில் கூறுகையில், மக்கள் ஆபாச தளங்களை பார்க்கும் பொழுது அவர்களது திரையில் "browser has been locked" என்ற போலியான pop-up notification வருகிறது.  அதனையடுத்து அதனை unlock செய்ய வேண்டுமெனில் பணம் செலுத்துமாறு அந்த நபரை எச்சரிக்கிறது.  மேலும் இது சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில் அரசாங்கத்தினால் அனுப்பப்படும் செய்தி போல காண்பிக்கிறது.  அதாவது,173-279 சட்டத்தின் கீழ் இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பார்ப்பது மற்றும் பரப்புவது போன்ற மற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக உங்கள் கணினி lock செய்யப்படுகிறது என்று கூறுகிறது. 


 



அதனையடுத்து lock செய்யப்பட்ட கணினியை மீண்டும் unlock செய்ய அபராதமாக 29,000 ரூபாயை ஆறு மணி நேரத்திற்குள் செலுத்துமாறு கேட்கிறது. அவ்வாறு கேட்கப்பட்ட அபராத தொகையை செலுத்த தவறினால் குற்ற செயலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு அமைச்சகத்திற்கு மாற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.  மேலும் visa அல்லது mastercard மூலம் பணம் செலுத்தும் வசதியையும் காண்பிக்கிறது. மேலும் அவர் கூறுகையில் இதேபோன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மோசடி ஒன்றில் 3000 ரூபாய் அபராதமாக கேட்கப்பட்டது. ஆபாச படங்கள் பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், இதுபோன்ற அபராதங்களை அரசாங்கம் விதிப்பதில்லை, அரசாங்கத்தின் பெயரில் போலியாக இதுபோல் மக்களிடம் மோசடி செய்யப்படுகிறது. 


இந்த மோசடியிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது ஆபாசத் தளங்களை பார்ப்பதை கைவிட வேண்டும்.  அதையும் மீறி நீங்கள் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பொழுது இதுபோன்ற pop-up notification வந்தால் ctrl+alt+delete மற்றும் End Task என்பதை தேர்வு செய்யலாம்.  அதுவும் வேலைக்கு ஆகவில்லையெனில் shut down செய்துவிடலாம்.


ALSO READ |திருமண தடைகளை விலக்கும் எளிய ஜோதிட பரிகாரங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR