என்னதான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது மொபைல்களில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பெருமைப்பட்டாலும் அனைவரும் கவலைப்படும் ஒன்று பேட்டரி.  நமது ஸ்மார்ட்போன்களில் நாம் வைத்திருக்கும் பல ஆப்ஸ்கள் நமது பேட்டரியை விரைவில் ட்ரை ஆக்கிவிடுகிறது.  கூகுள் ப்ளே ஸ்டோரில் நமது ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஏற்ற வகையில் பல சிறப்பான செயலிகள் உள்ளது.  ஒவ்வொருவரும் பலவிதமான செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வைத்திருக்கின்றனர். ஆனால் நாம் டவுன்லோடு செய்யக்கூடிய அனைத்து செயலிகளும் நமக்கு நன்மை செய்துவிடாது, சில ஆப்ஸ்கள் நமது ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை குறைத்து விடுகிறது.  எந்தெந்த ஆப்ஸ்கள் அதிகளவில் உங்கள் பேட்டரி திறனை குறைகிறது என்று பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்



1) ஃபிட்பிட் (Fitbit)
2) உபெர் (Uber)
3) ஸ்கைப் (Skype)
4) ஃபேஸ்புக் (Facebook)
5) ஏர்பிஎன்பி (Airbnb)
6) இன்ஸ்டாகிராம் (Instagram)
7) டிண்டர் (Tinder)
8) பம்பிள் (Bumble)
9) ஸ்னாப்சாட் (Snapchat)
10) வாட்ஸ் அப் (WhatsApp)


மேற்கண்ட பத்து செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை ட்ரை ஆக்குவதாக கண்டறிபட்டு இருக்கிறது.  இந்த செயலிகளை நீங்கள் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும் அவை உங்கள் மொபைலின் பேட்டரியின் திறனை குறைக்கிறது.  ஃபிட்பிட் மற்றும் வெரிசோன் ஆகியவை உங்கள் பேட்டரியின் திறனை சீக்கிரமே குறைக்கும் பிரபலமான செயலியாகும்.  பெரும்பாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் லிங்க்டின் போன்ற ஆப்ஸ்கள் தான் நீங்கள் அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும்  பின்னணியில் உங்கள் பேட்டரியை காலி செய்கிறது.  இதுதவிர நீங்கள் பயன்படுத்தக்கூடிய டேட்டிங் ஆப்ஸ்களை உங்கள் பேட்டரியை வீணடிக்கிறது, இந்த செயலிகள் எப்படி உங்கள் உணர்ச்சியை தூண்டுகிறது அதைப்போலவே உங்கள் பேட்டரியையும் சீக்கிரமே காலியாக்கிவிடுகிறது.


மேலும் படிக்க | Samsung Galaxy M04: வெறும் ரூ.9,499-க்கு கிடைக்கும் ஒரு ஸ்டைலான அசத்தல் ஸ்மார்ட்போன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ