தேவையற்ற அனைத்து WhatsApp படங்கள், வீடியோக்களை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி?

ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால் உங்கள் மொபைலின் வேகம் குறையும் மற்றும் வேறு பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியாது.  ஸ்டோரேஜை சரிசெய்ய வேண்டுமென்றால் தேவையில்லாத மீடியாக்களை நீங்கள் டெலீட் செய்ய வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 16, 2022, 03:30 PM IST
  • வாட்ஸ்அப் புகைப்படங்கள் மொபைலின் ஸ்டோரேஜ் நிரம்பிவிடும்.
  • ஸ்டோரேஜை சரிசெய்ய மீடியாக்களை நீங்கள் டெலீட் செய்ய வேண்டும்.
தேவையற்ற அனைத்து WhatsApp படங்கள், வீடியோக்களை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி? title=

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசேஜ் செய்வதற்கு மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஃபைல்கள், கிஃப்-கள் மற்றும் ஸ்டிக்கர்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.  தனது பயனர்களின் வசதிக்கேற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி பலவித அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.  வாட்ஸ்அப் மூலமாக நாம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற இதர மீடியாக்களால் உங்கள் மொபைலின் ஸ்டோரேஜ் நிரம்பிவிடும்.  ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால் உங்கள் மொபைலின் வேகம் குறையும் மற்றும் வேறு பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியாது.  ஸ்டோரேஜை சரிசெய்ய வேண்டுமென்றால் தேவையில்லாத மீடியாக்களை நீங்கள் டெலீட் செய்ய வேண்டும்.  இப்போது வாட்ஸ்அப்பில் இருக்கக்கூடிய தேவையற்ற மீடியாக்களை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale: ஐபோன் 14-ல் அதிரடி சலுகை, ரூ.26,000 தள்ளுபடி

ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை சரிபார்த்து டேட்டாவை நீக்க வேண்டும்.  வாட்ஸ்அப் டேட்டாவை பார்க்க, வாட்ஸ்அப் > செட்டிங்ஸ் > ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா > செல்ல வேண்டும்.  இப்போது நீங்கள் போன் மெமரி மற்றும் வாட்ஸ்அப் மீடியாக்கள் எவ்வளவு  என்பது பற்றி பார்க்கலாம்.  ஸ்டோரேஜை சரிபார்த்த பிறகு, பெரியளவில் உள்ள அல்லது பல முறை அனுப்பப்பட்ட மீடியாக்கள் இருந்தால் அதனை நீங்கள் டெலீட் செய்து ஸ்டோரேஜை சரிசெய்யலாம்.  

வாட்ஸ்அப்பில் இருந்து மீடியாவை டெலீட் பிறகும் அவை உங்கள் மொபைலின் ஸ்டோரேஜில் இருக்கக்கூடும் என்பதால் அதனை முற்றிலுமாக கேலரியில் இருந்து டெலீட் செய்ய வேண்டும்.  வாட்ஸ்அப் சாட்டை திறந்து அதில் எந்த புகைப்படம், வீடியோ பைல்களை டெலீட் செய்ய வேண்டுமோ அவற்றை தேடுதல் ஆப்ஷன் மூலமாக டெலீட் செய்துகொள்ளலாம்.  மேலும் மொபைல் டேட்டா அல்லது வைஃபையில் தேவையற்ற மீடியா தானாக டவுன்லோடு ஆகாமல் இருக்க, பயனர்கள் மீடியா ஆட்டோ டவுன்லோடையும் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க | அச்சத்தில் Google! வருகிறது சர்வ வல்லமை பொருந்திய ChatGPT!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News