திருமண உறவில் பார்ட்னர் துரோகம் செய்கிறாரா... இந்த 5 அறிகுறிகள் காட்டிக்கொடுத்துவிடும்!
Relationship Tips: திருமண உறவிலோ, காதல் உறவிலோ உங்கள் பார்ட்னர் இந்த அறிகுறிகளில் ஒன்றை வெளிப்படுத்தினால் கூட அவர் உறவை முறித்துக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
Relationship Tips In Tamil: இன்றைய காலகட்டத்தில் காதலும் சரி, திருமணமும் சரி மிகுந்த சிக்கலுக்குள் சிக்கியுள்ளது. ஆண் - பெண் உறவு என்றாலே அதில் சிக்கல் இல்லாமல் இருக்காது, அப்படியிருப்பதும் மிக குறைவுதான். அந்த சிக்கல்களுடன் உறவை ஆரோக்கியமாக எடுத்துச் செல்வதே அதனை இன்னும் பலமாக்கும் என்பார்கள்.
பல்வேறு விஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆண் - பெண் உறவை சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. அதிலும் உறவில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவது என்பது அந்த சிக்கல்களுள் மிகப்பெரிய ஒன்றாகும். ஒருவருடன் உறவில் இருக்கும் போதே மற்றொருவருடன் நெருக்கமாக இருப்பது என்பது அந்த உறவின் மீதான நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகவே அது கருதப்படுகிறது.
இந்த 5 அறிகுறிகள்
குறிப்பாக, திருமண உறவில் இருக்கும் ஒருவரோ அல்லது காதல் உறவில் இருக்கும் ஒருவரோ தங்களின் பார்ட்னருக்கு தெரியாமால் மற்றொருவரோடு உடல் ரீதியான உறவில் ஈடுபட்டால் மட்டுமே அது துரோகம் என்றில்லை. அதை தவிரவும் பல நுண்ணிய விஷயங்கள் உறவில் ஒருவர் துரோகம் இழைக்கிறார் என்பதை குறிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
அதாவது, உங்கள் பார்ட்னர் உங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது இந்த 5 அறிகுறிகளை வெளிபடுத்துகிறார் என்றால் அவர் உங்கள் உறவில் இருந்து நழுவ முயற்சிக்கிறார் என புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் வல்லுநர்கள். இருப்பினும், இது ஒவ்வொருவருக்கும் மாறும் என்பதால் பொதுவான விஷயமாக குறிப்பிட முடியாது. எனவே உங்களுக்கு இது சார்ந்த சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் இதுசார்ந்த வல்லுநர்களை தொடர்புகொண்டு ஆலோசனை மேற்கொள்ளவும்.
உரையாடுவது நல்லது
மேலும், Micro Cheating என்றழைக்கப்படும் இந்த நுண்ணிய ஏமாற்றும் வேலை என்பது உறவில் உங்களுக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணியாகும்.
- உங்களின் பார்ட்னர் அவரின் முன்னாள் காதலி/காதலன் உடன் போனில் பேசினார் என்றாலோ மெசேஜில் சேட் செய்கிறார் என்றாலோ இவற்றை உங்களிடம் இருந்து மறைக்கிறார் என்றாலோ நீங்கள் சற்று கவனமாக இருக்க லேண்டும். இந்த நேரத்தில் உங்கள் பார்டனரிடம் அதிக நேரத்தை செலவிட்டு உங்களின் சந்தேகத்தை குழப்பமின்றி போக்கிக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு முன்னால் மற்றொருவரின் அழகைப் பற்றியோ, அவரின் வெற்றியை பற்றியோ உங்கள் பார்ட்னர் அடிக்கடி பாராட்டுகிறார் என்றால் அந்த நபரால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
- ஒருவர் உங்களிடம் இருந்து மொபைல் மறைக்கிறார் என்றாலோ, நீங்கள் அருகில் வந்தாலே மொபைல் ஸ்கிரீனை மறைக்கிறார் என்றாலோ அங்கு சிக்கல் இருக்கலாம். அடிக்கடி கால் ஹிஸ்டரியை டெலீட் செய்வது, மெசேஜ்களை அழிப்பது போன்றவையும் இதற்கு உதாரணமாகும். இவை நம்பிக்கையை சீர்குழைக்கும்.
- உங்கள் பார்ட்னர் அவரின் பிரச்னைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் வேறொருவரிடம் பகிர்ந்துகொண்டால் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அர்த்தம். இது உறவில் இருந்து வெளியேறி வெளியில் இருந்து புது உறவை தேடப்போகிறார் என்பதற்கான ஒன்றாகும்.
- சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நபரின் கமெண்டில் அதிக கமெண்ட்ஸ் இடுவது, ஃபிளர்ட் செய்து மெசேஜ் அனுப்பவது ஆகியவையும் இந்த வகையிலேயே சேரும்.
பொறுப்பு துறப்பு: Micro Cheating குறித்த இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. இதுகுறித்து சந்தேகம் எழுந்தால் வல்லுநர்களை ஆலோசிக்கலாம். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.
மேலும் படிக்க | பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ