ஆண்களிடம் தவிர்க்கே முடியாத 9 பழக்க வழக்கங்கள் : சகித்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் இவை

Men Lifestyle News Tamil : ஆண்களைப் பற்றி குணநலன்களை தெரிந்து கொள்ள விருபினால், இங்கே பட்டியலிடப்படுகிற விஷயங்கள் கட்டாயம் இடம்பெறும். ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் கூட இவை சகித்துக் கொள்ள வேண்டிய உண்மைகள். 

Tamil Lifestyle News : ஆண்களுக்கே இருக்கக்கூடிய குணநலன்கள் என்று பெரும்பாலும் பொதுவெளியில் சொல்லப்படும் நடத்தைகளைவிட, மற்றொரு பக்கம் இருக்கக்கூடிய அதிகம் பேசப்படாதவை என்று சில நடத்தைகள் இருக்கின்றன. அவை சகித்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். 

1 /9

முகத்தில் தொற்றும் பாக்டீரியா - ஆண்கள் அதிகம் தாடி வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு முகத்தில் புழுவட்டு உள்ளிட்ட ஒருவகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதை பார்த்திருப்பீர்கள். இது தாடிகளை நன்றாக பராமரிக்காத நண்பர்களிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் பாக்டீரியா தொற்றுகள். ஆனால், தொற்று ஏற்பட்ட ஆண்களுக்கு அது எப்படி வந்தது என்றே தெரியாது என்பது தான் விந்தை.

2 /9

டெஸ்டோஸ்டிரோன் - ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்தால் குரல் மட்டும் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். அதிவேகமாக செயல்படுவது முதல் என்னால் எதுவும் முடியும் என்ற தோரணையுடன் சுற்றுவார்கள். இத்தகைய நடத்தைக்கு டெஸ்டோஸ்டிரோன் காரணம் என்றாலும், இதன் காரணமாக அவர்கள் அதிக சண்டை சச்சரவுகளில் சிக்குவார்கள். விபத்தில் மாட்டிக் கொள்வார்கள். வேடிக்கையான பல நடத்தைகளிலும் ஈடுபடுவார்கள்.

3 /9

தொழில்நுட்பங்களுக்கு அடிமை - ஆண்களுக்கே உரிய ஒருவகை குணம் என்றால் தொழில்நுட்பங்களுக்கு சீக்கிரம் அடிமையாகிவிடுவார்கள். அதனால் சிறுவயது குழந்தை முதல் பெரியவர்கள் என வகைப்படுத்திப் பார்த்தால் ஏதாவதொரு தொழில்நுட்பத்துக்கு அடிமையாக இருப்பதை காண முடியும். இதனால் அவர்களுக்கு தூக்கம் வராது, சிந்திக்கும் திறன் குறையும். சிக்கல்களை விலை கொடுத்து வாங்குவார்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குவார்கள். 

4 /9

மோசமான உணவுப்பழக்கம்- பெண்களைக் காட்டிலும் மோசமான உணவுப்பழக்கம் ஆண்களுக்கே அதிகம். பெண்கள் வீட்டில் இருக்கும் உணவுகளை சாப்பிட விரும்புவார்கள் அல்லது அவர்களின் சூழல் காரணமாக வீட்டு உணவுகளை உண்பார்கள். ஆனால் ஆண்கள் ஜங்க் புட்கள் எனப்படுகிற கொழுப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வார்கள். 

5 /9

உணர்ச்சிகளை வெளிப்படாது- ஆண்களுக்கே இருக்கும் சாபம் என்னவென்றால், வெளிப்படையாக தங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். இதுவே அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடுகிறது. சூழலுக்கு ஏற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதபோது மன அழுத்தம், கவலை, இறுக்கம் போன்ற மனச்சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இது மோசமான வாழ்க்கை முறைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. 

6 /9

திசை உணர்வு- இது ஆண்களுக்கே இருக்கக்கூடிய ஆற்றல். அதாவது, ஒரு திசையை அறிவது அல்லது புதிய இடத்துக்கு செல்வது என்றால் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஈஸியாக ஒரு இடத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். 

7 /9

நகைச்சுவை உணர்வு- நகைச்சுவை விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருக்கின்றன. ஆண்கள் பெரும்பாலும் விளையாட்டுத்தனமான, கிண்டல் மற்றும் பாடி லாங்குவேஜ் மூலம் ஈஸியாக ஒருவரை மகிழ்ச்சிப்படுத்திவிடுவார்கள். அதாவது சிறந்த எண்டர்டெயின்மென்ட் ஆண்களால் கொடுக்க முடியும். இதன் மூலம் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் சிறந்த ஆளுமையாகவும் திகழ்வார்கள். 

8 /9

ஆண்களின் நட்பு- நட்பு விஷயத்தில் ஆண்களே ஒருபடி முன்னால் நிற்பார்கள். இது ஆண்களின் வாழ்க்கைச் சூழலுக்கு உகந்ததாக நட்பு அமைவதால் அவர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சகோதரத்துவமும் ஆண்களிடம் அதிகம் இருக்கும். 

9 /9

உடல் நலம் பேணாமை- அதேநேரத்தில் ஆண்களிடம் உடல்நலத்தின் மீது அக்கறை கொள்வதில் சோம்பேறித் தனம் இருகும். உள்ளூர இருக்கும் பயம் காரணமாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள தயங்குவார்கள். இந்த விஷயத்தில் சந்தேகம் அவர்களை ஆட்கொள்ளும்.