பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..!

Women's Fertility News Tamil : பெண்கள் குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த தவறுகள் அவர்களுக்கான குழந்தை பாக்கியத்தை முற்றிலுமாக கெடுக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2024, 05:09 PM IST
  • பெண்களுக்கு மலட்டு தன்மை ஏன் ஏற்படுகிறது
  • தினசரி வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
  • இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
பெண்கள் இந்த 5 தப்ப பண்ணவே பண்ணக்கூடாது.. குழந்தை வரம் கிடைக்காது..! title=

Women's Fertility Latest News Tamil : பெண்களிடையே ஏற்படும் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் தான். அது குறித்து நீங்கள் முன்பே தெரிந்து கொண்டீர்கள் என்றால் மலட்டு தன்மையில் இருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமுமே காணப்படுகின்றன என்றாலும், பெண்களிடம் காணப்படும் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் என்ன? என்பதை பார்க்கலாம். 

பெண்களிடையே காணப்படும் பொதுவான பிரச்சனைகள்

கருவுறாத பெண்களிடையே காணப்படும் பொதுவான பிரச்சனைகள் என்னவென்றால், ஆரோக்கியமான சமச்சீர் உணவு இருக்காது. உணவுமுறையில் ஒழுங்கின்மை இல்லாத பெண்களிடம் கருவுறுவதில் பிரச்சனை இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிக எடை அல்லது மிகவும் குறைவான எடை என இரண்டுமே கருவுறாமைக்கு பிரச்சனைகளாக இருக்கின்றன. ஏனென்றால் இவையிரண்டும் பெண்களின் அண்டவிடுப்பை பாதிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது ஆகியவையும் கருவுறுதலில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. 

மேலும் படிக்க | ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல்

ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பழக்கம் இவையிரண்டும். மது மற்றும் புகைப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் கருவுறுதலையும் பாதிக்கிறது. அதாவது, பெண்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் கருவுறாமல் இருந்தால், இப்பழக்கம் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து கருப்பையை சேதப்படுத்தியிருக்கலாம். அதே நேரத்தில், அதிகப்படியான மது அருந்துதல் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 

போதிய உடற்பயிற்சி இல்லாமை

கருவுறுதலுக்கு உடல் இயக்கம் என்பது மிக மிக அத்தியாவசியம். அதாவது தசைகளுக்கு முறையான பயிற்சி, அழுத்தம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அவை தினமும் உடற்பயிற்சி செய்தாலே அவைகளுக்கு கிடைத்துவிடும். அந்தவகையில் பார்க்கும்போது தினசரி உடற்பயிற்சி யாரெல்லாம் செய்யவில்லையோ, அவர்களுக்கு பொதுவாகவே இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கக்கூடும். வழக்கமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே இதில் கவனம் செலுத்துவது நல்லது. 

அதிக மன அழுத்தம்

மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு அவை கருவுறுதலை கடுமையாக பாதிக்கும். அதாவது மன அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு அண்டவிடுப்பில் தாமதம் ஏற்படலாம். மேலும் கருப்பையின் தன்மையும் பாதிக்கப்பட்டு, கருவுறுதலை பாதிக்கிறது. 

மாதவிடாய் பிரச்சனைகளை கவனிக்காமை

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும். ஒழுங்கற்ற அல்லது வலிமிகுந்த மாதவிடாய் என்பது கருவுறாமைக்கு வழிவகுக்கும். அவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்றவற்றின் அறிகுறிகள். அப்படியான பிரச்சனைகள் இருந்தால் உடன்னடியாக மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News