விவாகரத்தால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன? - அதை கையாள்வது எப்படி?

Divorce: விவாகரத்து பெறும் தம்பதிகள் அதில் இருந்து குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
Divorce In Marriage Relationship: திருமண உறவே இந்த காலகட்டத்தில் பெரும் சிக்கல்களுடன் கையாளப்படும் நிலையில், விவாகரத்து என்று வந்துவிட்டால் அதன் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். திருமண உறவில் இருவருக்கும் ஒன்றிணைந்து வாழும் சூழல் இல்லாவிட்டாலும் சரி, ஒருவருக்கு ஒருவர் மேல் இருக்கும் நம்பிக்கை மறைந்துவிட்டாலும் சரி அவர்களுக்கு தீர்வாக அமைவது விவாகரத்துதான்.
திருமணத்தை போன்று விவாகரத்தும் இரண்டு பேர் சம்பந்தப்பட்டது என்றாலும் அதில் பல பேரின் தலையீடுகளும், பல்வேறு தரப்பின் முடிவுகளும் இருக்கும். அது குடும்பத்தினராக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், நெருக்கமானவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் விவாகரத்து குறித்து அந்த தம்பதியினர் மட்டுமின்றி பல பேர் இணைந்து அந்த முடிவை எடுக்கக்கூடிய சூழலும் இங்கு இருக்கிறது.
விவாகரத்தை சரியாக கையாளவும்...
விவாகரத்தை பெரும்பாலும் இந்திய சமூகம் ஆரோக்கியமாக கையாள்வதில் தவறிழைக்கிறது என்றே சொல்லலாம். ஆணும் - பெண்ணும் பரஸ்பரம் தங்களுக்குள் உறவை முறித்துக்கொள்வதே இரண்டு பேரின் எதிர்காலத்திற்கும் சிறந்த ஒன்று என முடிவெடுக்கும்போது அதனை சரியாக கையாளாமல் இரண்டு பேருக்கும் சமரசம் செய்வதாக நினைத்து ஒரு சிக்கலை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றனர்.
சமீபத்தில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா - செர்பிய மாடல் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோர் பிரிந்து வாழ்வதாக பொதுவெளியில் அறிவித்த உடன் இரு தரப்பையும் பலர் மோசமாக வசைப்பாடுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அதாவது, திருமணம் செய்துவிட்ட பின் விவாகரத்து செய்வது என்பது பாவத்திற்குரிய செயலாக நினைக்கின்றனர். ஒவ்வொரு விவாகரத்து பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது என்பதால் அதனை பொதுவாக பாவத்திற்குரியது என பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.
பாதிக்கப்படுவது குழந்தைகளே...
எனவே, விவாகரத்தை சரியாக அணுகக் கூடிய பக்குவத்தை சமூகம் இப்போதுதான் ஓரளவுக்கு அடைந்திருக்கிறது என்பதால் அதுகுறித்த உரையாடல் தொடர்ந்துகொண்டே இருப்பதே ஆண் - பெண் உறவுச் சிக்கலுக்கு தீர்வை ஏர்படுத்தும் எனலாம். இவை ஒருபுறம் இருக்க, விவாகரத்து பெற்ற குழந்தைகள் குறித்துதான் பலரும் யோசிப்பார்கள்.
ஒரு விவாகரத்தால் யார் பாதிக்கப்படுகிறாரோ இல்லையா, அதன்மூலம் எக்கச்சக்க இன்னல்களுக்கு ஆளாவது அந்த தம்பதியரின் பிள்ளைகள்தான். எனவே, விவாகரத்து பெறும் தம்பதிகள் அதில் இருந்து குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம். அவை குழந்தைகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதே முக்கிய கடமையாகும்.
மாற்றங்கள் நிகழலாம்...
விவாகரத்தான தம்பதிகள் பரஸ்பரம் புரிந்துகொண்டு பிரிந்தாலும் கூட அது குழந்தைகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கவலை, கோபம், குழப்பம், பிடித்தவர்களை இழக்கும் பயம் என பல உணர்ச்சிகளின் தாக்கத்தால் அவர்கள் திக்குமுக்காடுவார்கள்.
ஏனென்றால், அவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியாது. அந்த குழந்தையின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் புயலாகவும் வீசியிருக்கக்கூடும். அவர்களின் பெற்றோர் ஏன் பிரிந்தனர் என்ற குழப்பமே அவர்களுக்கு அதிகம் இருக்கும். இருவரையும் ஏன் வேறு வேறு இடங்களில் தனித் தனியாக பார்க்கிறோம் என்றும் அவர்களுக்கு புரியாது. விவாகரத்திற்கு பின் குழந்தையின் நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் நிகழலாம்.
விளையாட்டில், படிப்பில் அவர்களால் கவனம் செலுத்த முடியாமல் கூட போகலாம், அடிக்கடி கோபம் கூட ஏற்படலாம். இவை பெற்றோர் பிரிந்துவிட்டனர் என்ற ஆற்றமையால் எழுவது. இந்த பிரச்னைகள் ஏதும் இன்றி குழந்தைகள் இருக்க விவாகரத்தான தம்பதிகளின் முயற்சிதான் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
பிரிந்த தம்பதிகள் செய்வது வேண்டியவை?
விவாகரத்திற்கு பின்னர் உங்கள் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் நடவடிக்கையாலோ அல்லது குழந்தையினாலோ நீங்கள் பிரியவில்லை என்பதை நீங்கள் அவர்களிடம் தெளிவாக புரியவைக்க வேண்டும். அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். பெற்றோர் இருவரும் குழந்தையை சந்திக்க வேண்டும். ஹர்திக் - நடாஷா ஆகியோர் இருவரும் மகன் அகஸ்தியாவை கவனித்துக்கொள்வதாக கூறியிருப்பது ஆரோக்கியமான ஒன்றாகும். இதில் குழந்தையின் வயதும் முக்கியமான ஒன்று.
மிக வயது குறைந்த குழந்தை என்றால் அவர்களால் இதனை புரிந்துகொள்ள முடியாது. அதேநேரத்தில், சற்று பருவம் எய்திய குழந்தை என்றால் அவர்கள் இதன் தீவிரத்தை புரிந்துகொள்வார்கள், இருப்பினும் அவர்களுக்கும் உங்களின் உதவி நிச்சயம் தேவை. அவருடன் யாராவது இருந்துகொண்டே இருங்கள். ஒருவேளை, உங்கள் குழந்தை விவாகரத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டால் இதற்கான மருத்துவ வல்லுநர்களிடம் அழைத்துச்செல்லுங்கள்.
மேலும் படிக்க | திருமண உறவை சீரழிக்கும் இந்த 3 விஷயங்கள்... பெண்கள் செய்யும் பெரிய தவறுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ