கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறைந்தது 3 நாட்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ரஷ்ய சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது உடலில் அழுத்தம் அதிகரிக்கும், தடுப்பூசி பெற்ற உடனேயே உடலுக்கு அழுத்தம் (physical stress) கொடுப்பது நல்லதல்ல என்பதால் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.


மாஸ்கோ: பொதுவாகவே கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் அடுத்த சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதோடு, உணவு மற்றும் சுகாதாரத்திலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Also Read | Weight Loss: முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!!!


ஆனால் ரஷ்யாவின் சுகாதார அதிகாரிகள் மற்றுமொரு பெரிய எச்சரிக்கையை தந்துள்ளனர். தடுப்பூசி பெற்ற பிறகு குறைந்தது 3 நாட்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


நிபுணர்களின் இந்த அறிவுறுத்தலுக்கு காரணம் என்ன?  
இது பற்றி குறிப்பிடும் சரடோவ் (Saratov) நகரின் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் டெனிஸ் கிராஃபர், 'உடலுறவுக்குப் பிறகு உடல் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கிறது, தடுப்பூசி போட்டுக் கொண்ட சமயத்தில் அப்படி மாற்றம் ஏற்படுவது சரியில்லை.


உடலுறவின் போது நிறைய ஆற்றல் செலவாகும் (energy consumption) என்பது அனைவருக்கும் தெரிந்ததே!. அதனால்தான் அதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தடுப்பூசி பெற்ற பிறகு, பாலியல் உட்பட அனைத்து வகையான உடல் செயல்பாடுகளையும் அடுத்த 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


Also Read | Health Tips: தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி


அதிகப்படியான செக்ஸ் ஆபத்தானது


டாக்டர் டெனிஸ் கிராஃபர் சொல்வதற்கு மூத்த மருத்துவ அதிகாரி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தடுப்பூசிக்குப் பிறகு செக்ஸ் செய்ய விருப்பம் இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். ஆனால், அதை கவனமாக செய்யுங்கள் என்று கூறினார். ரஷ்யர்களுக்கு ஒரு பொது அறிவு இருக்க வேண்டும், செக்ஸ் விஷயத்தை மிகைப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். 


முன்னதாக ரஷ்யாவில், தடுப்பூசி போட்ட உடனேயே ஓட்கா (vodka) குடிப்பது, புகைபிடித்தல் மற்றும் நீராவி குளியல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


ரஷ்யாவில் 13% மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.கொரோனா வைரஸுக்கு ரஷ்யா இரண்டு தடுப்பூசிகளை தயாரித்த பிறகும், உலகில் குறைவாக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஒன்றாகவே அந்நாடு இருக்கிறது என டெய்லி மெயில் பத்திரிகை தெரிவிக்கிறது.


13 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன. அதேசமயம், பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை சராசரியாக 30 சதவீதத்திற்கு மேல் உள்ளது. தடுப்பூசி போடுவதில் நிலவும் மந்தத்தன்மைக்காகவும் ரஷ்யா பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.


Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR