புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) பாரத் பயோடெக்கின் COVID19 தடுப்பூசி கோவாக்சின் இடம் பெறுவது குறித்த முடிவை ஆகஸ்ட் முதல் வாரத்தில் WHO வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (emergency use list (EUL)) சேர்ப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) முடிவெடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த வெபினாரில் பேசிய சுவாமிநாதன், கோவாக்சின் உற்பத்தியாளர் பாரத் பயோடெக் இப்போது அதன் முழு தரவையும் சுகாதார அமைப்பின் போர்ட்டலில் பதிவேற்றி வருவதால் WHO, கோவேக்சினை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மறுஆய்வு செய்து வருகிறது என்றார்.
WHO is likely to take decision on Emergency use Listing (EUL) of Bharat Biotech's #COVID19 vaccine Covaxin, decision is expected to come in the first week of August: Sources
— ANI (@ANI) July 10, 2021
WHO வழிகாட்டுதல்களின்படி, EUL என்பது பொது சுகாதார அவசர காலங்களில் புதிய அல்லது உரிமம் பெறாத தயாரிப்புகளைப் பயன்படுத்தக்கூடிய செயல்முறையை சீராக்கும் செயல்முறையாகும்.
"EUL மற்றும் தடுப்பூசிகளின் முன் தகுதிக்கு ஒரு செயல்முறை பின்பற்றப்பட உள்ளது, இதன் கீழ் ஒரு நிறுவனம் 3 ஆம் கட்ட சோதனைகளை முடித்து முழு தரவையும் WHO இன் ஒழுங்குமுறை துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும், இது ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவால் ஆராயப்படுகிறது" என்று செளம்யா சுவாமிநாதன் கூறினார்.
தரவின் முழுமை, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்தித் தரம் உட்பட அனைத்து தரவுகளையும் பாரத் பயோடெக் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டது என்றும், நான்கு முதல் ஆறு வாரங்களில் இது சேர்ப்பது குறித்து ஒரு முடிவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்” என்று சவும்யா கூறினார்.
தற்போது, ஃபைசர் (Pfizer) பயோஎன்டெக் (BioNTech), அஸ்ட்ராஜெனெகா-எஸ்.கே. பயோ (Astrazeneca-SK Bio), சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India), அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca EU), ஜான்சென் (Janssen), மாடர்னா (Moderna), சினோபார்ம் (Sinopharm) ஆகிய தடுப்பூசிகளுக்கு WHO ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read | பாரத் பயோடெக்கின் COVAXIN தடுப்பூசிக்கு நிபுணர் குழு ஒப்புதல்
"தற்போது EUL பட்டியலில் ஒப்புதல் பெற்ற ஆறு தடுப்பூசிகள் உள்ளன. மூலோபாய ஆலோசனைக் குழுவின் நிபுணர்களின் (SAGE) பரிந்துரைகளைக் பரிசீலிக்கிறோம். தொடர்ந்து கோவாக்சினைப் ஆய்வு செய்துவருகிறோம். பாரத் பயோடெக் இப்போது அவர்களின் தரவை எங்கள் போர்ட்டலில் பதிவேற்றத் தொடங்கிவிட்டனர். எங்கள் தடுப்புக் குழு தரவுகளை மதிப்பாய்வு செய்து அது தொடர்பான முடிவை வெளியிடும்” என்று தலைமை விஞ்ஞானி செளம்யா கூறினார்.
தற்போது, மருத்துவ மதிப்பீட்டில் 105 தடுப்பூசிகள் உள்ளன. WHO அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்படும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்பவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல தகுதியுடையவர்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு செய்துக் கொள்ள வேண்டியதில்லை.
COVAXIN தடுப்பூசியின் பெயர் இறுதி பட்டியல் சேர்க்கப்படாவிட்டால், இந்தியாவில் அதனை போட்டுக் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் வெளிநாட்டு பயணம் கேள்விக் குறியாகலாம்.
Also Read | WHO தடுப்பூசி பட்டியலில் கோவேக்ஸின் இடம் பெறுவது எப்போது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR