ஒருவருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவில் எவ்வித விரிசலும் ஏற்படக்கூடாது என நினைத்தால் அந்த உறவில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இருக்கக்கூடாது.  எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கும் உறவில் தான் அதிக நெருக்கம் ஏற்படும், சிலர் தங்கள் துணையிடம் இருந்து சில விஷயத்தை எதிர்பார்ப்பார்கள்.  அவர்களின் துணையால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்.  எல்லா உறவுகளிலும் சண்டை சச்சரவுகள் வரும் தான். இருப்பினும் அந்த சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொறுத்தே அந்த உறவின் ஆரோக்கியம் இருக்கும்.  ஒரு உறவில் என்றால் எப்படி இருக்கும், நீங்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் ஏற்படும் பதற்றத்திற்கான காரணம்! இதை செய்யுங்கள் மக்களே


1) உங்களை மகிழ்ச்சிப்படுத்துவது ஒன்று மட்டுமே உங்கள் துணையின் முதன்மையான பணி என்று நீங்கள் நினைக்கக்கூடாது.  எப்போதும் எல்லோராலும் ஒரே மனநிலையில் இருந்துவிட முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொண்ட அவர்களுக்கான இடத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.


2) செக்ஸ் என்பது உறவில் இன்றியமையாத ஒன்று, இது இருவருக்குமே தேவைப்படக்கூடியது.  அதேசயம் உடலாலும் மனதாலும் இருவருக்கும் இதன் மீது ஈடுபாடு இருக்க வேண்டியது அவசியம்.  உங்கள் துணைக்கு இந்த விஷயத்தில் விருப்பம் உள்ளதா, இல்லையா என்பது புரிந்துகொண்டு அதற்கேற்ப நீங்கள் நடந்துகொள்வது நல்லது.



3) உங்கள் துணையை நீங்கள் மட்டும் தான் நேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவருக்கு உங்களை மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்றோ நினைப்பது தவறு.  மற்றவர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பதால் உங்கள் துணைக்கு உங்கள் மீது காதல் இல்லை என்று ஆகிவிடாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


4) உறவுகள் எப்போதும் சுமூகமாகவே இருந்துவிடாது, இதில் மிக கடினமான பாதைகளும் உண்டு மற்றும் உணர்வுரீதியாக உறவில் பல காயங்களும் ஏற்படும்.  சரியான உறவு வேண்டுமென்றால் நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், அன்யோன்யமாக இருப்பதற்கும் முயற்சியும் போராட்டமும் தேவை.


5) உறவில் எப்போதும் ரொமான்ஸ் மட்டுமே இருந்தால் அது விரைவில் சலிப்பு தட்டிவிடும்.  உறவு என்பது ரொமான்ஸ் மட்டுமல்ல, இதில் மரியாதை, எதிர்பார்ப்பு, புரிந்துணர்வு என பல விஷயங்கள் உள்ளது, இவை அனைத்தையும் நீங்கள் கடந்து வர வேண்டும்.


6) எல்லா உறவுமே நாம் படத்தில் காண்பது போல அழகாக இருந்துவிடாது, உண்மையாகவே காதலில் பலவித சிரமங்கள் உள்ளது.  பல தடைகளை நீங்கள் கடந்து வர வேண்டும், எப்போதும் காதல் நன்றாகவே இருந்துவிடாது.


7) பொறாமை என்பது காதல் உறவில் தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் இந்த உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் உள்ளது.  பொறாமை அதிகமாகும்போது அது சந்தேகமாக மாறி உறவை முறித்துவிடும்.


மேலும் படிக்க | புதிதாக திருமணமான தம்பதிகளா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ