Do Not Take Hot Shower During Winter : நவம்பர்-டிசம்பர் மாதங்களில், கடும் வெயில் அடிக்கும் சென்னையில் கூட அவ்வப்போது ஏசி போட்டது போல இருக்கும் வானிலை. அதிலும் அதிகாலை குளிர் குறித்து பேசவே வேண்டாம். இப்படிப்பட்ட குளிர் காலத்தில் பலருக்கு தொட்டாலே ஜில்லென்று இருக்கும் தண்ணீரில் குளிக்க பிடிக்காது. உடலுக்கு ஏதுவாக இருக்கும் என வெதுவெதுப்பாக வெந்நீரில் குளிக்க இவர்கள் விரும்புவர். குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால், நம் சருமத்திற்கும் முடிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என ஒரு மருத்துவர் பகீர் கிளப்பியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு மருத்துவர் விக்டோரியா பார்போசா என்பவர் பேட்டியளித்திருக்கிறார். அதில், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சில உடல் நரம்புகளை சாந்தப்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்பட்டாலும், அதற்கு ஈடாக சில பாதிப்புகளும் ஏற்படுகிறதலாம் என கூறியிருக்கிறார்.


வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்?


ரத்த ஓட்டம் அதிகரித்தல்:


குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பதால், உடலில் இருக்கும் ரத்த நாணங்கள் வேகமாக செயல்பட தொடங்குமாம். இதனால், ரத்த ஓட்டம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் உள்ளூற இருந்தும், வெளிப்புறமாகவும் நம்மை கதகதப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது. 


தசைகளை சாந்தப்படுத்துகிறது:


சூடான நீர், இந்த குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் சோர்வு, தசை வலி ஆகியவற்றை போக்கவும் உதவுமாம். 


நோயெதிர்ப்பு சக்தி:


வெந்நீரில் குளிப்பது வியர்வையைத் தூண்டுமாம். உடல் நச்சுகளை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. இது குளிர்காலத்தில் வரும் சளி மற்றும் சுவாச பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. 


நல்ல தூக்கம்:


உறங்க செல்வதற்கு முன்பு, சுடு தண்ணீரில் குளிப்பதால் உடலும் மனதும் சேர்ந்து ரிலாக்ஸ் ஆகிறதாம். இது, உங்களுக்கு வரும் தூக்கத்தையும் மேம்படுத்துமாம். 


பாதிப்புகள் என்ன? 


தினமும் சுடு தண்ணீரில் குளிப்பதால், அது நமது முடி மற்றும் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் பார்போசா தெரிவிக்கிறார். இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில்தான் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். நமது சருமம் மற்றும் முடியில் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை இருக்குமாம். தினம்தோறும் சுடுநீரில் குளிப்பதால் அந்த இயற்கை எண்ணெய் லேயர் அடுக்கு காணாமல் போகிறதாம். இதனால், முடியும் சருமமும் உயிரிழந்து போய் விடும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இதனால் முடி இழப்பு அபாயங்களும் ஏற்படலாம்.


மிகவும் சூடான நீரில் தலைக்கு குளிப்பதால், தலையில் இருக்கும் இயற்கை எண்ணெய் மற்றும் சருமம் செயலிழந்து விடலாம். இது, முடி பாதுகாப்பிற்கு அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இது இல்லை என்றால் முடி வறண்டு போய் விடுமாம். 


என்னதான் வழி?


வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும், மிகவும் சூடான தண்ணீரில் அல்லாமல், வெதுவெதுப்பான நீரில் உடலுக்கும் தலைக்கும் குளிப்பது நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். 


குளித்த பின்பு..


குளிர்காலத்தில் சாதாரண நீரில் குளித்தாலும், வெந்நீரில் குளித்தாலும் கண்டிப்பாக சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியமாகும். மாய்ஸ்ட்ரைஸர் உபயோகிப்பது, சன் ஸ்கிரீன் தடவுவது முக்கியம். அப்போதுதான் சருமத்தின் பளபளப்பு தன்மை குறையாமலும், மேலும் எண்ணெய் வடியாமலும் இருக்குமாம். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ