How To Sharpen Memory Power In Kids : பெற்றோர் பலருக்கு, அவரவர் குழந்தைகளின் புத்தி கூர்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
How To Sharpen Memory Power In Kids : குழந்தைகள்தான் வருங்கால சமுதாயத்தின் அடித்தளம். இவர்களை கொண்டாடும் விதமாக, ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமான இன்று (நவ.,14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் குழந்தைகளின் நினைவுத்திறனையும் புத்திக்கூர்மையையும் அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போமா?
விளையாட்டுகள்: நினைவுத்திறனை அதிகரிக்கும் வகையிலான விளையாட்டுகளை விளையாடலாம். புதிர் விளையாட்டுகள், ஒரே மாதிரியான கார்டுகளை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு போன்றவை
சிறிய வகையில் உடற்பயிற்சி செய்ய தூண்டலாம். பார்க்கிற்கு அழைத்து சென்று விளையாட வைக்கலாம்.
குழந்தைகளுக்கு கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். அவர்கள் எதை படித்தாலும், எதை செய்தாலும் அதை இன்னொரு முறை நினைத்துபார்க்க வைக்க வேண்டும்.
நினைவில் வைத்துக்கொள்ள கடினமாக இருக்கும் விஷயங்களை பாதியாக உடைத்து நினைவில் வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
கற்றல் திறன் அவர்களுக்கு கசப்பானதாக மாறிவிடக்கூடாது. பாடங்களை, பாடல்களாக அல்லது கதைகளாக சொல்லிக்கொடுக்கலாம். இது அவர்கள் படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்க அவர்கள் 7-8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
எந்த விஷயத்தை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை அவர்களை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லுங்கள். இதனால், அந்த விஷயம் அவர்கள் மனதில் அப்படியே நிற்கும்.
பெர்ரி பழங்கள், ஓமேகா 3 சத்து அடங்கிய உணவுகள், நட்ஸ், முட்டை, கீரை வகைகள் ஆகியவை மூளைத்திறனை அதிகரிக்கும் உணவுகளாக பார்க்கப்படுகிறது. இவற்றை மூளைத்திறன் அதிகரிக்க பயன்படுத்தலாம்.