கழிப்பறையில் மொபைலைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இது உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தும். மறந்து கூட இதுபோன்ற தவறை செய்யாதீர்கள். மொபைல் போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஒரு நிமிடம் கூட மொபைலை விட்டு விலகி இருக்க விரும்பாத சிலர் இருக்கிறார்கள் ( Using Mobile). மொபைல் இல்லை என்றால், அவர்கள் பதட்டமடைந்துவிடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலருக்கு கழிப்பறையில் கூட மொபைலை பயன்படுத்தும் பழக்கம் இருக்கும், ஆனால் இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது. இது உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தும். கழிப்பறையில் மொபைலை பயன்படுத்தினால் நீங்களும் உங்கள் முழு குடும்பமும் ஆபத்தான பாக்டீரியாக்களால் பாதிக்கப்படலாம்.


கழிப்பறையில் மொபைல் (Using Mobile In Toilet)
கழிப்பறையில் மொபைலைப் பயன்படுத்தினால், பைல்ஸ் (Piles) பிரச்சனை வரலாம். பைல்ஸ் பிரச்சனை வயதானவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பொதுவானதாகிவிட்டதற்கு காரணமும் டாய்லெட்டிலும் மொபைலை பயன்படுத்துவதுதான் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


கழிப்பறையில் மொபைலை பயன்படுத்தும்போது, கவனக் குறைவால், நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருப்பீர்கள், மொபைலை பயன்படுத்தும்போது, நேரம் போவதே தெரியாது என்பதை மறுக்க முடியுமா?  


ALSO READ | புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ‘இந்த’ பழக்கங்களை இன்றே கைவிடவும்!


மூல நோய் 
சிலர் கழிப்பறையில் உள்ள கம்மோடில் அமர்ந்து மொபைலில் செய்திகளைப் படிப்பார்கள். சமூக ஊடக தளங்களில் படிப்பது, வீடியோக்களைப் பார்ப்பது, மொபைலில் பேசுவது என நீண்ட நேரம் கழிப்பறையில் உள்ள கமோடில் அமர்ந்திருப்பதால், கீழ் மலக்குடல் மற்றும் ஆசனவாயின் தசைகளில் அழுத்தம் அதிகரிக்கிறது, இது மூல நோய்க்கு மூலமாகிறது (Spending more time in mobile).  


 போனில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும்


இது தவிர, கழிப்பறையில் மொபைலை எடுத்துச் செல்வதால் பாக்டீரியா தொற்றும் ஏற்படலாம். கழிப்பறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் மொபைலில் ஒட்டிக்கொள்ளலாம். 


கழிப்பறையை விட்டு வெளியே வரும்போது கைகளைக் கழுவிவிட்டாலும், மொபைலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாக்டீரியா கைகளில் வந்துவிடும். இந்த பாக்டீரியாக்களால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்படலாம்.


எனவே, கழிவறையில் மொபைலை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.


ALSO READ | அத்தி மரத்தின் அருமையும், பெருமையும் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR