புதுடெல்லி: விநாயகரைப் பற்றி பேசும்போது அவர் மிகவும் எளியவர், அணுகுவதற்கு சுலபமானவர் என்று சொல்வதுண்டு. பிள்ளையாரை மரத்தடியிலும் பார்க்கலாம், பிரம்மாண்டமான கோவிலிலும் பார்க்கலாம். இந்து மதக் கோவில்களில் கணபதிக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவர் ஆற்றங்கரையில் மட்டும் தான் இருப்பாரா? அக்கரை என்ன, கடல் தாண்டி அஜர்பைஜானிலும் இருக்கிறார் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018 ஆம் ஆண்டில் அன்றைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அஜர்பைஜான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் தலைநகரம் பாகுவிற்கும் அவர் சென்றார். அப்போது செய்தித்தாள்களில் வெளியான அவரது புகைப்படத்தில், இந்து கோவிலுக்கு சென்று வணங்கிய காட்சி இடம் பெற்றிருந்தது.


அந்த இடத்தில் இருந்த கல்லில் சமஸ்கிருத மொழியில் சில சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஸ்ரீ கணேசாய நம என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தில் ஓம் அக்னே நம என்ற ரிக்வேதப் பாடலும் இடம் பெற்றிருந்தன. இது, அஜர்பைஜான் போன்ற ஒரு முஸ்லீம் நாட்டில் விக்ன விநாயகருக்கும் இடம் இருந்ததை நிரூபித்தது.  



இந்த செய்தியை வெளியுறவு அமைச்சகம் செய்திருந்த ட்விட்டர் செய்தி உறுதிப்படுத்தியது.   'அக்னேய நம! வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகுவில் உள்ள 'தீக் கோயில்' அட்டேஷ்காவில் பிரார்த்தனை செய்கிறார். இந்த கோவில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகளின் வழிபாட்டுத் தலமாக இருந்தது. 1745-56 இல் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இங்கு விநாயகரை வழிபாடு நடைபெற்றதும், புனிதமான நெருப்பைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்த கோவில் 1745ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த கோவில் அட்டேஷ்கா கோவில் என்று அழைக்கப்படுகிறது. அட்டேஷ்கா என்பது இடைக்கால இந்து மதத் தலம், அஜர்பைஜானின் தலைநகரான பாகுவுக்கு அருகிலுள்ள சுரக்கனி நகரில் கணபதியின் ஆலயம் அமைந்துள்ளது.


READ ALSO | "இயற்கை மூலப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும்" - சத்குரு


இந்தக் கோவில் ஒரு பென்டகன் வடிவ கலவையின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. அட்டேஷ் மூல வார்த்தை பாரசீக மொழியைச் சேர்ந்தது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து, பழங்காலத்திலிருந்தே விநாயகர் வழிபாடு மற்றும் அக்னி வழிபாடு இங்கு செய்யப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்து மதத்தைச் சேர்ந்த கோவில்களையும் இடங்களையும் உடைத்து அழிக்கும் செய்திகளையே முஸ்லீம் நாடுகளிலிருந்து நாம் அடிக்கடி கேட்போம். ஆனால் மாறாக, அஜர்பைஜானில் இந்த விநாயகர் ஆலயம் மிகவும் பிரபலமானது. இந்தக் கோவிலை அஜர்பைஜான் அரசு பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கிறது.  


இந்த கோவில் பார்சிகள் மற்றும் சீக்கியர்களுக்கும் முக்கியமானதாகும். பார்சிகள் அக்னிக்கு மத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் தான் இங்கு எரியும் இயற்கை நெருப்பில் அவருக்கு நம்பிக்கை உள்ளது. இப்போது இந்த கோவிலில் தீ இயற்கையாக எரியவில்லை என்றாலும், அதன் அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு அங்குள்ள அரசு அணையா தீபத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்த கோவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது, இப்போது ஆண்டுதோறும் 115,000 சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.


Also Read | விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR