விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chadurthi) அன்று பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை செயற்கை முறையில் இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் என்று கோவை ஈஷா (Covai isha) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் "இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர் விநாயகர். அன்பான தன்மையாலும் , குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் உள்ள மக்களால் வணங்கப்படுகிறார்
ALSO READ : காரில் இருந்து அரை நிர்வாணமாக பெண் பிணம் ரோட்டில் வீச்சு
இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் "விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.அந்தப் பண்டிகையின் போது நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண் , சிறுதானியம் , மஞ்சள் போன்ற "சுற்றுச் சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தயாரித்தால் அதை நீரில் கரைக்க முடியாது.பானைகள் செய்வதைப் போல சுடு மண்ணில் தயாரித்தாலும் அதை கரைக்க முடியாது.
மேலும் சிலையின் மீது "செயற்கை வர்ணங்களை பூசினால் அது நீரை மாசுப்படுத்தும். ஆகவே நீரில் கரையும் தன்மை கொண்ட இயற்கை மூலப் பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலையை தயாரித்து இவ்விழாவை கொண்டாட வேண்டும். ஒரு கடவுளை உருவாக்கி அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை "விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது.அதை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்.நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழி என்று அவர் வீடியோவில் பேசியுள்ளார்.
இது தவிர வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "நம் பிரியமான கணேசர் சூழலியலோடு மிகுந்த நட்புறவான கடவுள் ஆவார். எந்த மண்ணில் இருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்து போக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும். அவரை பொறுப்புடனும் , அக்கறையுடனும் கொண்டாட உறுதியேறபோம். ஆசிகள்! என தனது ட்விட்டர் பதிவில் சத்குரு ஜக்கிவாசு தேவ் (Sadhguru jakki vasudev) குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ : Petrol, Diesel (08-09-2021) Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR