மனச்சோர்வு, மன அழுத்தம் என்பதை மனநிலை கோளாறு என வகைப்படுத்தப்படுத்தலாம். இது ஒரு நபரின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் சோகம், இழப்பு அல்லது கோபத்தின் உணர்வுகள் என நடத்தை மாறுதல்களை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு உலகமெங்கும் மனசோர்வு அதிகரித்துள்ளதாக கவலை தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயல்பு வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


இது மிகவும் பொதுவானது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) அளித்த நம்பகமான ஆதாரங்களின் மதிப்பீட்டின்படி, 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களில் 8.1 சதவிகிதம் பேருக்கு 2013 முதல் 2016 வரை எந்த 2 வார காலம் மனச்சோர்வு இருந்தது.


மக்கள் மன அழுத்தத்தை பல்வேறு வழிகளில் அனுபவிக்கிறார்கள். இது உங்கள் தினசரி வேலையை பாதிக்கலாம், இதன் விளைவாக நேரத்தை சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம்.  உற்பத்தித்திறனும் குறையும். இது உறவுகளையும் பாதிக்கும், நாள்பட்ட சுகாதார சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். மனச்சோர்வு காரணமாக, கீல்வாதம், ஆஸ்துமா, இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் எனசுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம். 


Also Read | சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை?


மனசோர்வை கையாள்வது எப்படி?


மனச்சோர்வு என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதை உணர வேண்டியது அவசியம். சோகமான மற்றும் வருத்தமளிக்கும் நிகழ்வுகள் அனைவருக்கும் நடக்கும். ஆனால், நீங்கள் தொடர்ந்து மனச்சோர்வடைந்தால் அல்லது நம்பிக்கையற்றவராக இருந்தால், மனச்சோர்வு உங்களை அதிகம் பாதிக்கலாம். 


மனச்சோர்வு என்பது தீவிர மருத்துவ நிலை என்று கருதப்படுகிறது, சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மோசமடையக்கூடும். மனசோர்வுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒருசில வாரங்களில் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது கண்கூடான உண்மை ஆகும். 
 
மனச்சோர்வின் அறிகுறிகள் என்ன என்பது தெரியுமா? 
ஒரு நிலையான சோக நிலை அல்லது "விரக்தியான" உணர்வாக இருக்கும். மனச்சோர்வு அதிகமாவதை பல்வேறு அறிகுறிகளில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். அந்த அறிகுறிகளில் சில உங்கள் மனநிலையைப் பாதிக்கின்றன, மற்றவை உங்கள் உடலைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தும் இருக்கலாம், அல்லது அவ்வப்போது வந்து போவதாகவும் இருக்கலாம்.


ALSO READ | என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா; லவங்க டீ ட்ரை பண்ணுங்க...


மனச்சோர்வின் அறிகுறிகள் என்பது, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாறுபடும். ஆண்களுக்கு, கோபம், ஆக்ரோஷம், எரிச்சல், கவலை, அமைதியின்மை போன்ற மனநிலை ஏற்படலாம். 


உணர்வுபூர்வான வெறுமை, மனதில் வெற்றிடம், சோகம், அவநம்பிக்கை, வாழ்வில் பிடித்தம் குறைந்து போவது, பிடித்த செயல்களை செய்வதில் கூட திருப்தி ஏற்படாதது, எளிதில் சோர்வடைவது, தற்கொலை எண்ணங்கள், அதிகப்படியான குடிப்பழக்கம், போதை மருந்துகளைப் பயன்படுத்துதல், அதிக ஆபத்துள்ள செயல்களில் ஈடுபடுதல் என பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம்.


சிலருக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்றால், சிலருக்கு பாலியல் ஆசை குறையும், பாலியல் செயல்திறனே குறைந்தும் போகலாம். அறிவாற்றல் திறன்கள், கவனம் செலுத்த இயலாமை, பணிகளை முடிப்பதில் சிரமம், உரையாடலின் போது தாமதமாக பதில்கள் சொல்வது, தூக்கமின்மை, ஆழ்ந்த உறக்கமின்மை, அதிக தூக்கம், இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது என ஆண்களின் பிரச்சனைகளின் பட்டியல் நீளுகிறது. அதோடு, உடல் நலம், சோர்வு, வலிகள், தலைவலி, செரிமான பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.


Also Read | சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் தெரியுமா?


பெண்களுக்கு மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகள், ஆண்களில் இருந்து வித்தியாசப்படலாம். எரிச்சலான மனநிலை, உணர்ச்சி கொந்தளிப்பு, சோகமாக அல்லது வெறுமையாக இருப்பது, கவலை அல்லது அவநம்பிக்கையுடன் இருப்பது, அன்றாட செயல்பாடுகளில் ஆர்வம் இழப்பது, சமூக ஈடுபாட்டிலிருந்து விலகுவது, தற்கொலை எண்ணங்கள் போன்ற நடத்தை மாறுபாடுகள் ஏற்படலாம்.


சிந்தனை அல்லது மெதுவாக பேசுவது போன்ற அறிவாற்றல் திறன்கள் மங்கிப் போகலாம். இரவு முழுவதும் தூங்குவதில் சிரமம், அதிகாலையில் எழுந்திருப்பது, அதிகமாக தூங்குவது போன்ற தூக்கப் பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ளலாம். 


பட்டியல் இன்னும் நீளுகிறது. பெண்களின் மனசோர்வானது, உடல் நலனை பாதிக்கலாம், ஆற்றல் குறைதல், அதிக சோர்வு, பசியின்மை, உடல் எடையில் மாற்றங்கள், வலிகள், வேதனை, தலைவலி என பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படலாம்.


எனவே, மனசோர்வு இருப்பதாக தோன்றினால், மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல் நலனுக்கும், மனநலனுக்கும் நல்லது.


READ ALSO | கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR