Vegetarian Diet: சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை?

சைவ உணவு மற்றும் அசைவ உணவு என்ற இரு வகைகளில், அவரவர் தேர்வுக்கான காரணங்கள் மாறுபடும். சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சைவ உணவிலும் பல வகைகள் உள்ளன. ..  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2021, 02:07 PM IST
  • சைவ உணவு உண்ண காரணங்கள் என்ன?
  • மதமா?
  • மனமாற்றமா?
Vegetarian Diet: சைவத்தில் இத்தனை வகையா? நீங்கள் எந்த வகை? title=

உணவு என்பது உயிரினங்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. காலப் போக்கிற்கு ஏற்ப உண்ணும் உணவுகளும், அவற்றின் விதங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. பசிக்காக சாப்பிடுபவர்கள் சிலர் என்றால், ருசிக்காக சாப்பிடுபவர்கள் பலர். எதுஎப்படியிருந்தாலும், உலக அளவில் உணவு வகைகள் இரண்டு பெரிய பிரிவுகளில் அடங்கிவிடுகின்றனர். 

சைவ உணவு மற்றும் அசைவ உணவு என்ற இரு வகைகளில், அவரவர் தேர்வுக்கான காரணங்கள் மாறுபடும். மத அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், விலங்குகளின் உரிமைகள் போன்ற நெறிமுறை காரணங்களுக்காகவும் பெரும்பாலான மக்கள் சைவ உணவை பின்பற்றுகிறார்கள்.

சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சைவ உணவு உண்பவர்களாக மாற முடிவு செய்பவர்களும் உண்டு. கால்நடை உற்பத்தியானது, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கிறது, காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது மற்றும் அதிக அளவு தண்ணீர், ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன.

READ ALSO | அதிகமாக மிளகு சேர்த்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் வரும்

எனவே சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சைவ உணவிலும் பல வடிவங்கள் உள்ளன.  

மிகவும் பொதுவான வகைகள் பின்வருமாறு:

லாக்டோ-ஓவோ-சைவ உணவு (Lacto-ovo-vegetarian diet): இறைச்சி, மீன் மற்றும் கோழிகளை சாப்பிடாத முறை இது. ஆனால் முட்டை மற்றும் பால் பொருட்களை அனுமதிக்கிறது.

லாக்டோ-சைவ உணவு (Lacto-vegetarian diet): இறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டைகள் இல்லாத உணவு முறை. ஆனால் பால் பொருட்களை சாப்பிடலாம்.

ஓவோ-சைவ உணவு (Ovo-vegetarian diet): இறைச்சி, மீன், கோழி மற்றும் பால் பொருட்களை நீக்குகிறது ஆனால் முட்டைகளை அனுமதிக்கிறது.
பெசெட்டேரியன் உணவு: இறைச்சி மற்றும் கோழிகளை நீக்குகிறது ஆனால் மீன் மற்றும் சில நேரங்களில் முட்டை மற்றும் பால் பொருட்களை அனுமதிக்கிறது.

READ ALSO | Foods vs Lungs: நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் 5 உணவு வகைகள்

சைவ உணவு (Vegan diet): இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்கள், மற்றும் தேன் போன்ற பிற விலங்குகளால் பெறப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை நீக்குகிறது.

நெகிழ்வான உணவு (Flexitarian diet): எப்போதாவது இறைச்சி, மீன் அல்லது கோழிகளை சாப்பிடலாம், ஆனால் பெரும்பாலும் சைவ உணவு.

சுகாதார நலன்கள்
சைவ உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையவை. உண்மையில், சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி உண்பவர்களை விட சிறந்த தரமான உணவை உண்கின்றனர். சைவ உணவு உண்பவர்களின் உணவில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

ALSO READ | என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா; லவங்க டீ ட்ரை பண்ணுங்க...

சைவ உணவு சாப்பிடுவது, வேறுபல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் சைவ உணவுக்கு மாறுவது ஒரு சிறந்த உத்தி. சைவ உணவு உண்பவர்கள், சராசரியாக, அசைவ உணவு உண்பவர்களை விட 18 வாரங்களில் சராசரியாக 2 கிலோ எடை குறைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதேபோல், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 74 பேரிடம் ஆறு மாதங்கள் மேற்கொண்ட ஆய்வில், சைவ உணவுகள், குறைந்த கலோரி உணவுகளை விட உடல் எடையை குறைப்பதில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்தது.

கூடுதலாக, கிட்டத்தட்ட 61,000 பெரியவர்களில் ஒரு ஆய்வில், சைவ உணவு உண்பவர்கள் மற்றவர்களை விட குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (body mass index) இருப்பதைக் காட்டுகிறது. பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டு எண் என்பது, உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உடல் எடையை குறிக்கும் அளவீடு ஆகும்.

சைவ உணவு உண்பவர்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். பெருங்குடல், மலக்குடல் மற்றும் வயிறு உட்பட பல விதமான புற்றுநோய்கள், சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.  

ALSO READ | சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் தெரியுமா?

சைவ உணவு புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை.

சைவ உணவு ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சைவ உணவுகள் நீண்ட காலத்திற்கு ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

2,918 பேரில் ஒரு ஆய்வின்படி, அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறுவது சராசரியாக ஐந்து ஆண்டுகளில் நீரிழிவு நோய் வருவதற்கான 53% ஆபத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்ல, சைவ உணவுகள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும் பல இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.

READ ALSO | கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News