Covid Carrier: கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை

கொரோனா இருப்பதாக பொய் சொல்லி பயம் காட்டினால் என்ன நடக்கும் தெரியுமா? இரண்டாண்டு சிறைதண்டனை....

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 26, 2021, 11:55 PM IST
  • எச்சில் துப்பினால் 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம்
  • உணவுப்பொருட்களின் மீது எச்சில் துப்பிய பெண்ணுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை
  • கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும், விளையாட்டு வினையானது
Covid Carrier: கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை title=

கொரோனா வைரஸால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில், மனிதர்களின் மன வக்கிரங்கள் படுத்தும் பாடு அனைவரையும் திகைக்கச் செய்கிறது.

கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க பற்பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்னும் நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களால் அது பரவாமல் இருப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் விதிமுறைகளை மீறுவதையே வேலையாக வைத்திருக்கும் விதிவிலக்கான மனிதர்களும் உண்டல்லவா?

அப்படி விதிவிலக்காய் நோய்த்தொற்றை பரப்ப வேண்டுமென்றே முயற்சி செய்ததாக ஒருவர் சொன்னால் என்ன செய்வது? அவருக்கு கிடைத்தது சிறை தண்டனை தான்… அதிலும் கோவிட் பாதிப்பு இருப்பதாக சொன்னவர் எச்சில் துப்பியது வெட்ட வெளியில் அல்ல, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 25.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் மீது... பிறகு அவருக்கு கையில் விலங்கு மாட்டாமல், தலையில் கிரீடமா சூட்டுவார்கள்?

ALSO READ | திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண் சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்று, திட்டமிட்டு, அங்குள்ள உணவுப் பொருட்களின் மீது இருமிவிட்டு, தனக்கு கொடிய கோவிட் -19 தொற்று இருப்பதாக சொன்னார்.

கொரோனா மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்தாலும், அந்த கொலைகார வைரஸை மிகவும் லேசாக எடுத்தும்க் கொண்டு விளையாடும் சில மனிதர்களில் அந்தப் பெண்மணியும் ஒருவர்.  இறந்துவிட்டாலும், சிலர் சரியான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க மறுக்கும் இதுபோன்றவர்களை என்ன சொல்வது?

NBC செய்தி அறிக்கையின்படி, அந்த பெண் $ 35,000 (ரூ. 25.96 லட்சம்) மதிப்புள்ள உணவுப்பொருட்களின் மீது இருமினார்.

READ ALSO | ஆகஸ்ட் 26  மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!  

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகுக் அம்பலமானது. பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்ற 37 வயதான மார்கரெட் ஆன் சிர்கோ அங்கிருந்த உணவுப் பொருட்கள் மீது இருமியதோடு, எச்சிலையும் துப்பினார். அதன்பிறகு, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சத்தமிட்டுச் சொன்னார். 

அதுமட்டுமல்ல, சூப்பர் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கும், கொரோனா தொற்று ஏற்படப்போகிறது என்றும் அந்த பெண்மணி கத்தினார். இதனால் கூச்சல் குழப்பம் எழுந்த நிலையில், அங்கு விரைந்து வந்த சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை கடையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும்  தூக்கி எறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், அந்த பெண்மணி கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தன.

விசாரணையின் போது, சம்பவத்தின் போது அவள் குடிபோதையில் இருந்ததாக மன்னிப்பு கேட்டார். அவருடைய மன்னிப்புக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பிறகு 8 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளைத் தவிர, சூப்பர் மார்க்கெட்டுக்கு $ 30,000 அபராதம் செலுத்தும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Also Read | கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல 

இந்த முழு நிகழ்வையும் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் தனது பேஸ்புக் கணக்கில் பகிர்ந்துள்ளது. ஒரு பெண், கடைக்கு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மீது இருமினார். பேக்கரி பொருட்கள், இறைச்சி வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் மளிகைப் பொருட்கள் என ஒருசில பகுதிகளில் எச்சில் துப்பினார் என்று மேலாளர் எனக்குத் தெரிவித்தார்.

அந்த பெண் அதை குறும்பாகச் செய்தார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றாலும், எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அந்தப் பெண் தொட்ட, அல்லது அவரது தொடர்பு எல்லைக்குள் வந்த அனைத்துத் தயாரிப்புகளையும் தூக்கி எறிவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

ஹானோவர் டவுன்ஷிப் சுகாதார ஆய்வாளருடன் நெருக்கமாக பணியாற்றி, அந்த பெண் எங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்ன ஒவ்வொரு பகுதியையும் அடையாளம் கண்டோம், அவர் சென்ற இடங்களில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினோம், எல்லாவற்றையும் நன்கு சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தோம்.

இந்த கடுமையான தண்டனை கோவிட் தொற்றை விளையாட்டாக பேசுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக செயல்படலாம்.

ALSO READ | கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News