என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா; லவங்க டீ ட்ரை பண்ணுங்க..!!!

நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளான, இலவங்கப்பட்டை அல்லது லவங்கத்தில் மாங்கனீசு, இரும்பு, நார், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 04:34 PM IST
என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா; லவங்க டீ ட்ரை பண்ணுங்க..!!! title=

Cinnamon Tea for Weight Loss: இப்போது பண்டிகை காலம் என்பதால், விருந்துக்கு குறைவே இல்லை. அதனால், உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு தான் அதிகம். ஆனால் நீங்கள் சில எளிய பழக்கங்களை கடைபிடித்து வந்தால், பண்டிகை காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே உடல் எடையை கட்டுக்குள் வைக்கக்கலாம் . அதில் ஒன்று இரவில் இலவங்கப்பட்டை தேநீரை உட்கொள்வது. இது உடலில் உள்ள நாள்பட்ட  கொழுப்பை நீக்கும்.
நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளான, இலவங்கப்பட்டை அல்லது லவங்கத்தில் மாங்கனீசு, இரும்பு, நார், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது. இந்த சக்திவாய்ந்த மசாலா உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக உடல் எடையை குறிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போன்வர்கள் இதனை முயற்சி செய்யலாம். மேலும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெயர் பெற்றது.  

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தேநீர் எவ்வாறு உதவும்?

இலவங்கப்பட்டை தேநீரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, மேலும் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்க உதவுகிறது. மேலும், உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, உடலின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கலோரிகளை எரிக்கவும் முக்கிய பங்களிக்கும். 

ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஆன்ந்த் சூத் இது குறித்து தனியார் தொலைகாட்டிக்கு அளித்து பேட்டியின் போது கூறுகையில், “இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க பெரிது உதவுகிறது. பல நேரங்களில், ஒரு நபரின் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறும்போது, ​​சர்க்கரை வளர்சிதை மாற்றமடையாது, அது கொழுப்பாக மாற்றப்படுகிறது. இலவங்கப்பட்டை இன்சுலினைத் தூண்டவும், உட்கொண்ட உணவுகளிலிருந்து சர்க்கரையை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தவும் உதவும்” என்றார்.

இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

1 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்
1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி அல்லது அரை அங்குல இலவங்கப்பட்டை குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்
1 தேக்கரண்டி தேன்
1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 

செய்முறை:

இலவங்கப்பட்டை பொடி அல்லது இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து 
கலவை நன்றாக கொதித்தவுடன்  தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பானத்தை வடிகட்டி சூடாக குடிக்கவும்.

இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்தால், உடல் எடை குறைவதோடு,  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது கொரோனா காலத்தில் மிகவும் தேவையான ஒன்று. படுக்கை நேரத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது உங்கள் சோர்வடைந்த தசைகளை தளர்த்தி, கொழுப்பை எரிக்கும்.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News