PUBG மொபைல் கொரியா பதிப்பு ஜூலை 1 முதல் இந்தியாவில் இயங்காது. புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 1 முதல் இந்தியாவில் PUBG மொபைல் கொரியா பதிப்பு இயக்கப்படாது என புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


'KRJP உருவாக்கம் என்பது கொரியா அல்லது ஜப்பானில் வாழும் பயனர்களுக்கான உள்ளூர் சேவையின் பதிப்பாகும். பிற நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு, உங்கள் உள்ளூர் பதிப்பு அல்லது உலகளாவிய பதிப்பு கிடைக்கும்” என்று PUBG நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.


Also Read | Forbes பணக்காரர்கள் பட்டியலில் ஜாக்மாவை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி


இணைய பாதுகாப்பு கவலைகள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் PUBGமொபைல் தடை செய்யப்பட்டது.


PUBG மொபைலில் மேலும் செய்யப்படும் மாற்றங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஜூன் 30 முதல் இந்திய பயனர்களுக்கு நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பின்வருமாறு:


2021 மே 1 முதல், KRJPயில் உள்நுழைய முயற்சிக்கும் கொரியா அல்லது ஜப்பானுக்கு வெளியே உள்ள பயனர்கள் (KRJP உருவாக்கம் என்பது கொரியா அல்லது ஜப்பானில் வாழும் பயனர்களுக்கான உள்ளூர் சேவையின் ஒரு பதிப்பு), நிதி பரிவரத்தனையை செய்ய முடியாது.


Also Read | Driving License வாங்க RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா? புதிய விதிமுறைகள் என்ன?


மே 1, 2021 முதல், கொரியா அல்லது ஜப்பானுக்கு வெளியே கே.ஆர்.ஜே.பி உடன் கணக்கை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு இணையத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.  


2021 ஜூன் 30 முதல், கொரியா அல்லது ஜப்பானுக்கு வெளியில் வசிக்கும் பயனர்கள் KRJP கணக்கில் உள்நுழைய முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


"இந்த மாற்றங்கள் அனைத்தும் சிறப்பான சேவைக்களை வழங்குவதற்கானவை, சமத்துவமின்மை அல்லது பாகுபாடு தொடர்பான எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொரியா அல்லது ஜப்பானுக்கு வெளியே வசிக்கும் பயனர்களுக்கு அவரவர் நாட்டின் பதிப்பு அல்லது உலகளாவிய பதிப்பைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்" என்று PUBG மொபைல் கொரியா Instagramஇல் எழுதியது.


Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR