6 மாதத்தில் ₹82 லட்சத்துக்கு பெட்ஷீட்டும், டிவியும் வாங்கிய முதலமைச்சர் யார்?
6 மாதத்தில் ₹82 லட்சத்துக்கு பெட்ஷீட்டும், டிவியும் வாங்கிய முதலமைச்சர் யார் தெரியுமா? கார்பெட் ஒன்று மட்டும் 28 லட்ச ரூபாயாம்!
புதுடெல்லி: 6 மாத காலப்பகுதியில் படுக்கை விரிப்புகள், மர சாமானங்கள், டிவி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு 82 லட்சம் ரூபாய் செலவு செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த மெஹ்பூபா முஃப்தி தான் அந்த அரிய முதலமைச்சர். ஜூன் 2018 இல் மட்டும் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.ஈ.டி டி.வி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு என 25 லட்சத்துக்கு மேல் செலவிட்டதாக தகவல் அறியும் உரிமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி (Mehbooba Mufti) தனது பதவிக் காலமான 6 மாதங்களில் அரசு பங்களாவின் அலங்காரங்களுக்கு சுமார் 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கியதாக தெரியவந்துள்ளது. இதைத்தவிர ஒரு தரைவிரிப்பை வாங்க ஒரே நாளில் 28 லட்சம் ரூபாயை செலவிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த செலவு அனைத்தும் இந்திய அரசின் பணம், அவருடைய சொந்தப் பணம் அல்ல என்பது தான் சர்ச்சையின் அடிப்படை.
Also Read | Virat Kohliயின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா?
ஸ்ரீநகரில் (Sri Nagar), வசிக்கும் இனாம்-உன்-நபி செளதாகர் (Inam-un-Nabi Soudagar), தகவல் அறியும் உரிமையின் (RTI) அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகின. மெஹபூபா முப்தி முதலமைச்சரான பின்னர், ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அரசாங்க வீட்டுவசதிக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த விவரங்களை நெறிமுறை மற்றும் விருந்தோம்பல் செலவுகளை அது சம்பந்தப்பட்ட அரசு துறை வழங்கியுள்ளது.
ஜூன் 2018 இல் மட்டும், ரூ .22 லட்சம் மதிப்புள்ள எல்.ஈ.டி டி.வி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ரூ .25 லட்சத்துக்கு மேல் செலவிட்டார். செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் (IANS) 2020 செப்டம்பர் முதல் தேதியிட்ட ஆர்டிஐ பதிலின் நகலை பெற்றது. அதன்படி, 2017 ஜனவரி 30ஆம் நாளன்று 14 லட்சம் ரூபாய் செலவு (Expense) செய்யப்பட்டுள்ளது. தோட்டத்தில் வைக்கப்படும் குடை ஒன்று 2,94,314 ரூபாய்க்கு வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
Also Read | நெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்
11,62,000 ரூபாய் மதிப்புள்ள பெட்ஷீட்கள் பிப்ரவரி 22, 2018 அன்று வாங்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைக்கு கொடுக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 மார்ச் மாதத்தில், மெஹ்பூபா முஃப்தி வீட்டு உபயோக பொருட்களுக்காக 25 லட்சமும், தரைவிரிப்புகளுக்கு கிட்டத்தட்ட28 லட்சம் என கிட்டத்தட்ட 56 லட்சம் ரூபாய் செலவிட்டார்.
2016 ஆகஸ்ட் முதல் ஜூலை 2018 வரையிலான இரண்டு ஆண்டு காலப்பகுதியில் 40 லட்சம் மதிப்புள்ள கட்லரி (cutlery) பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.
ஜம்மு யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீட்கப்படும் வரை தேர்தல்களை புரக்கணிப்பதாக மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியிருந்தது. ஆனால், பிறகு தேர்தலில் போட்டியிட்ட முப்தியின் கட்சிக்கு மொத்தம் 280 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் இடங்களில் 27 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR