அத்தி மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. அதிலும் இந்து மதத்தில் அத்தி மரத்திற்கு என்று தனிப் பெருமையே உண்டு. அத்தி மரத்தில் செய்யப்பட்ட பெருமாளின் சிலை காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் உண்டு. அதேபோல, உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது என்பதும் உலகறிந்த உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிமரத்திலும், கிளைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும் அத்திக்காயை, காயாக மருத்துவத்திற்கும் (Medicinal Benefits of Athikkay) பயன்படுத்துவார்கள். துவர்ப்பும் இனிப்பும் உடைய அத்திப்பழம் ரத்த விருத்திக்கு பயன்படும் பழங்களில் முக்கியமான ஒன்று.
 
அத்தி மரத்தின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், அத்திப்பழம் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. காயும், பட்டையும், பழமும், மரமும் பயன்பட்டால், பிஞ்சும் பயன் தருகிறது. அதுவும், அத்தியின் பிஞ்சை பயன்படுத்தினால், காம உணர்வு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



அத்தி மரத்தை வெட்டினால் அதில் இருந்து வடியும் பால் மிகவும் சத்து மிக்கது. துவர்ப்பு சுவை கொண்ட அத்திப்பால், உடலுக்கு மிகச்சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்திப்பால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குறைக்கும் தன்மை வாய்ந்தது.


பொதுவாக தென்னை, பனை போன்ற மரங்களின் பாளையில் இருந்து பால் சுரக்கும். ஆனால், அத்தி மரத்தின் வேரில் தான் பால் சுரக்கும். அத்தியின் அடிமரத்தின் கீழ் உள்ள வேரைப் பறித்து நுனியைச் சீவி விட்டால் பால் வடியும்.


வயிறு தொடர்பான பிரச்சனைகள், வயிற்றுக்கடுப்பு, தாகம், நாவறட்சி, உடல் வெப்பம் முதலியவற்றை அத்திப்பழம் நீக்கும். ரத்தத்தை சுத்தீகரிப்பதில் அத்தியின் (Athi in Blood Purification) பங்கு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்ல, அத்தியை, பழமாகவோ அல்லது உலர் பழமாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூட்டு வீக்கம், வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை சரியாகும்.


ALSO READ | வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது?


அத்தி மரம் மிகவும் வலிமையான மரம் என்பதால், பண்டைய காலங்களில் மரத்தில் சிற்பங்கள் செதுக்கும்போது அத்தி மரப் பலகைகளை பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இந்து மத நம்பிக்கைகளின்படி,  சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம் என்று கூறப்படுகிறது.


கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு பரிகாரமாக அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு.  


அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.  அத்தி கல்க மூலிகைகளில் ஒன்று என்றும் தெய்வ அருள் பெற்ற மரம் என்றும் இந்து மதத்தில் நம்பப்படுகிறது.


ALSO READ | ஆண்களுக்கு அபார நன்மைகளைத் தரும் அத்திப்பழம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR