பாலியல் நெருக்கத்தை குறைக்கும் பொதுவான காரணங்கள் என்ன தெரியுமா?
உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது
புதுடெல்லி: உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது இதற்கு எனோபோபியா (Enophobia) என்று பெயர். பாலியல் உறவு தொடர்பான அச்சங்களுக்கு பொதுவான காரணங்கள் என்ன?
செயல்திறன் கவலை (Performance anxiety)
உடலுறவு கொள்வதற்காக திருமணம் வரை காத்திருப்பது என்பது, சமூக-கலாச்சார (socio-cultural) மற்றும் மத (religious) நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகும் எண்ணமாகும். அது, ஒருவர் வளரும் சூழ்நிலையில் அடிப்படையிலும் தீர்மானிக்கப்ப்டுகிறது. உடலுறவில் (sex) அனுபவமற்றவர்கள் பாலியல் ரீதியாக நெருங்குவது பற்றி கவலைப்படலாம்.
இதுபோன்ற கவலைகள் பாலியல் துணையின் விருப்பத்தை சரிவர நிறைவேற்றுவதில் தடையாக இருக்கலாம் என்று நினைத்து கவலைப்படலாம். அதாவது தனக்கு பாலியல் உறவைப் பற்றி எதுவும் தெரியாது என்ற எண்ணம் தன்னைத் தானே சங்கடப்படுத்தும். அதுமட்டுமல்ல, சிலருக்கு சுயமரியாதை பறிபோய்விடுமோ என்ற எண்ணமும் பாலியல் (sex) தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தும்.
ALSO READ | பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’
ஆணுறைகள் மற்றும் கர்ப்பம் (Condoms & Pregnancy)
புதிய உறவுகளில் உள்ள தம்பதிகள், குறிப்பாக புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட விரும்பலாம். எனவே, ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால், ஆணுறைகள் பிரிந்து போவதாலோ அல்லது கசிவு ஏற்பட்டாலோ, திட்டமிடாத கர்ப்பம் ஏற்படும் என்ற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு எழுவதாக கூறப்படுகிறது. கருத்தடைக்காக மட்டுமல்லாமல் வேறுசில காரணங்களுக்காகவும் ஆணுறைகள் (Condoms) பயன்படுத்தப்படும்போது, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுவது, உடலுறவை அனுபவிப்பதைத் தடுக்கலாம்.
தங்கள் ஆண் துணை, ஆணுறைகளை அணிய விரும்ப மாட்டார்கள் என்று பெண்கள் அஞ்சுகிறார்கள். ஆணுறைகள் ((Condoms ) புதியவை அல்ல, கருவுறுவதை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு உறைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய எகிப்தியர்கள், சீனர்கள் (Chineese) மற்றும் ஜப்பானியர்கள் பயன்படுத்தினர்.
இருப்பினும், இனப்பெருக்கம் செய்வதற்கான ஆழ் மரபணு இயக்கி காரணமாக உடலுறவின்போது எந்தவொரு தடையும் இருப்பதை மனித (Human beings) மனம் விரும்புவதில்லை. எது எவ்வாறாயினும் உடலுறவில் ஈடுபடும் இருவரின் சம்மதமே ஆணுறையை பயன்படுத்துவதில் மிகவும் முக்கியமானது. எனவே, ஆணுறை பயன்படுத்துமாறு ஒரு பெண் தனது துணையிடம் கேட்பதும் சில சமயங்களில் பாலியல் நெருக்கத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தலாம்.
ALSO READ | காதல் செய்தால் உடல் எடை கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பாலியல் நோய்கள் (STI)
ஆணுறை இல்லாமல் உடலுறவில் ஈடுபதுவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக ஆராய்ச்சிகள் கூருகின்றன. ஆனால் அது மிகவும் ஆபத்தானது. கோனோரியா (Gonorrhoea), கிளமிடியா (Chlamydia), சிபிலிஸ் (Syphilis) , ஹெர்பெஸ் (Herpes), ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி (Hepatitis A and B) போன்ற கடுமையான நோய்கள் மற்றும் அதிக உயிருக்கு ஆபத்தான எய்ட்ஸ் (AIDS) போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் ஆணுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கோனோரியா மற்றும் கிளமிடியா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இடுப்பு அழற்சி நோய் (Pelvic Inflammatory Disease (PID)) உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இந்த நோய்கள், பிறகு பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் போவதற்கு காரணமாகக்கூடும்.
மேலே குறிப்பிட்ட நோய்களில் பெரும்பாலானவற்றிற்கு சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் குணமாகிவிடும். ஆனால், இத்தகைய நோய்கள் குறித்த பயம் படுக்கையில் இருக்கும் ஜோடியின் நெருக்கத்தையும், பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்யும் முனைப்பையும் குறைக்கும்.
ALSO READ | ஆஸ்துமாவை குணமாக்கும் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரம்
கடந்தகால அச்சங்களும், தயக்கமும் எண்ணற்ற குழந்தைகள் பெரியவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும் வருத்தம் தரும் நிதர்சனமான உண்மை. அதன் எதிரொலியாக வளர்ந்த பிறகு அவர்களுக்கு பாலியல் தொடர்பான அச்சங்கள் ஏற்படும். பலர் பாலியல் உறவையே வெறுக்கிறார்கள். இது பலருடைய மனப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.
தங்கள் கடைசி உறவில் திருப்தியில்லாத பாலியல் அனுபவங்களைக் கொண்டிருந்தவர்கள் மீண்டும் அதுபோன்ற அனுபவம் மீண்டும் நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது எந்த அளவு சாத்தியம் என்பது தான் சிக்கலின் தீவிரத்தை நிர்ணயிக்கும். ஆனால், அதை உணர்ந்து, உளவியல் ரீதியிலான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது பாலியல் ரீதியிலான சங்கடங்களையும் சிக்கல்களையும் தீர்க்கும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR