புதுடெல்லி: பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது எழுகிறது. இந்த கேள்வியை எப்போதும் தவிர்க்க முடியாது. பாலியல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. அஸ்வகந்தா (Ashwagandha) ஒரு பண்டைய மருத்துவ மூலிகை, விஞ்ஞானமும் இந்த மூலிகைக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது.
அஸ்வகந்தாவுக்கு வேறுபல பெயர்களும் உள்ளன. அமுக்கிரா, அமுக்கரா, அமுக்கிரி அல்லது அசுவகந்தி என பல்வேறு பெயர்களால் அறியப்படும் அமுக்கிராவின் சில நன்மைகள் இங்கே. ஒரேயொரு மூலிகை ஆனால் அதன் பயன் பற்பல. அனைத்திலும் முக்கியமானது சிறந்த பாலியல் ஆரோக்கியம். இது முழு முதல் நன்மை என்றால், உபநன்மைகளாக, மிருதுவான சருமம், ஆரோக்கியமான கூந்தல் என பலவகை பலனை கொடுக்கிறது Ashwagandha.
ஆயுர்வேதத்தின் முன்னோடிகள் எழுதிய அரிய புத்தகங்களிலிருந்து நன்கு அறியப்பட்ட மூலிகைகளில் ஒன்று அஸ்வகந்தா. இந்த பாரம்பரிய மூலிகை, மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளுக்கும் பெயர் போனது. உடல் அழுத்தம், மனச் சோர்வு, மன அழுத்தம், பதட்டம் போன்ற பல பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்டது.
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
அஸ்வகந்தா, டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவிலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் சில சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆண்களின் பாலியல் உறுப்பில் விறைப்புத்தன்மை மற்றும் மனதில் பாலியல் கிளர்ச்சியை தூண்டுகிறது அஸ்வகந்தா.விறைப்புத்தன்மை குறைவாக இருப்பவர்களுக்கும், பாலியல் விருப்பம் குறைவாக இருப்பவர்களுக்கும் அஸ்வகந்தா அடிப்படையிலான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகளுக்கான ‘மூலிகை வயாகராவாக’ அஸ்வகந்தா கருதப்படுகிறது. இது மட்டுமா? உடல் பலவீனம், பசியின்மை, இருமல், ரத்தக் குறைவு, வாயுக் கோளாறுகள், வாத நோய்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக செயல்படும் அஸ்வகந்தாவை பயன்படுத்தி இந்த நன்மைகளை பெறலாம்...
ஆய்வுகள் படி, அஸ்வகந்தா ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், பாலியல் இயக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பெண்களின் பாலியல் விருப்பத்தையும் அதிகரிக்கிறது. இவற்றைத் தவிர, ஒருவரின் ஆற்றல், மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் அஸ்வகந்தா இதயம் மற்றும் நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது. எனவே தடகள விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் அஸ்வகந்தா ஒரு அருமருந்து என்றே சொல்ல்லாம்.
அஸ்வகந்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்த மூலிகையாக திகழ்கிறது. இது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது, நிறத்தை மங்காமல் பார்த்துக் கொள்வது என வயதாவதை தள்ளிப்போடும் பணியையும் செய்கிறது. அஸ்வகந்தாவை தொடர்ந்து பயன்படுத்தினால், முகத்திலும், சருமத்திலும் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும்.
Also Read | கொரோனா தடுப்பு மருந்துக்கு Moderna நிறுவனம் நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR