புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்று பலரின் வாழ்க்கைப்போக்கையும் மாற்றிவிட்டது. மழைக்குக் கூட மருத்துவமனையை ஒதுங்காதவர்கள், இன்று மருத்துவமனையில் இடம் கிடைக்காதா என்று அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் -19இன் தாக்கமும் வீரியமும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. மருத்துவர்களோ, நோயை குணப்படுத்த போராடி வருகின்றனர்.


நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொடுக்கும் மருந்துகள் அதன் செயல்திறன் பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு இருக்கிறது.


Also Read | இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது! கேன் வில்லியம்சன்


இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்ட்சிவிர் மருந்து, விரைவில் கோவிட் -19 சிகிச்சைக்கான பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று பல மருத்துவர்கள் கருதுகின்றனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ரெம்டெசிவிர் (Remdesivir). ஆனால்,கொரோனா வைரஸ் நோயைக் குணப்படுத்துவதில் இந்த மருந்தின் செயல்திறன் குறித்து ஆதாரம் ஏதும் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 


எனவே, Remdesivir விரைவில் கோவிட் -19 சிகிச்சையிலிருந்து விலக்கப்படலாம் என பல மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.   சிகிச்சை கொடுக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து கைவிடப்பட வேண்டுமானால், அந்த முடிவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) தான் எடுக்கும்.


Also Read | Coronavirus updates: ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு


முன்னதாக, பிளாஸ்மா சிகிச்சையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பது தேவையில்லை என அண்மையில் ஐ.எம்.சி.ஆர் தெரிவித்துள்ளது.


நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து பிளாஸ்மாவில் இருந்து ஆன்டிபாடியை எடுத்து, அதை தற்போது நோய்வாய்பட்டிருக்கும் ஒருவருக்கு கொடுப்பதுதான் பிளாஸ்மா சிகிச்சை. இந்த ஆன்டிபாடிகள், நோயுற்றவரின் உடலில் இருக்கும் வைரஸுடன் போராடுகின்ற்ன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் இந்த முறையில் பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டது.


ஆனால், கொரோனா பாதித்தவர்களின் பிளாஸ்மா கொடுப்பதால் நோயாளிகளின் உடலில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கடந்த ஒரு வருடத்தில் தெரியவந்தது. பிளாஸ்மா சிகிச்சை ஒரு அறிவியல் அடிப்படையில் தொடங்கப்பட்டது மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.


Also Read | பீதியைக் கிளப்பும் கருப்பூ பூஞ்சை: அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ


COVID சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் ரெம்டெசிவிர் எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பது தெரியவில்லை. பயனளிக்கிறது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. நோயை குணப்படுத்தாத மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று டெல்லியில் உள்ள பிரபல கங்காராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
 
"கொரோனாவுக்கு பரிசோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் மருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். பிளாஸ்மா சிகிச்சை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் \ ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கான ஆதாரங்கள் இல்லாததால் அவை விரைவில் கைவிடப்படலாம். இப்போது மூன்று மருந்துகள் மட்டுமே வேலை செய்கின்றன” என்று டாக்டர் ராணா கூறினார்.


ரெம்டெசிவிர் ஒரு காப்புரிமை பெற்ற மருந்து, கிலியட் லைஃப் சயின்சஸ் வழங்கிய தன்னார்வ உரிமங்களின் கீழ் இந்தியாவில் ஏழு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு இந்த மருந்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஹெட்டெரோ, ஜூபிலண்ட் பார்மா, மைலன், சின்கீன் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய 7 நிறுவனங்கள் இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விநியோகிக்கின்றன.


Also Read | ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR