ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, வடை மாலை சார்த்துவது ஏன் தெரியுமா?
ராமாயத்திலும், அதைத்தொடர்ந்து உப கதைகளிலும் ராம பக்த ஆஞ்சநேயர் குறித்த கதைகள் ஏராலம் கேட்டிருப்போம்..
ராமாயத்திலும், அதைத்தொடர்ந்து உப கதைகளிலும் ராம பக்த ஆஞ்சநேயர் குறித்த கதைகள் ஏராலம் கேட்டிருப்போம்..
உளுந்துவடை மாலை:
பயனற்ற நமது உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா (Anjaneyar) என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம்.
வெற்றிலை மாலை:
ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவிக்கும் வழக்கம் உண்டானது.
ALSO READ | பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவதால் கிடைக்கும் மகிமை..!
ஆஞ்சநேயருக்கு மாலையை கட்டுவது எப்படி?
இரு வெற்றிலை, ஒரு பாக்கு என வைத்துக் கொண்டு மாலை தொடுக்க வேண்டும். ஒரு மாலையில் 21 கண்ணிகள் அமைவது நல்லது. 48, 54, 108 எண்ணிக்கையிலும் வெற்றிலையைக் கட்டலாம். ஒற்றைப்படை எண்ணிக்கையில் 3, 5, 7 என சனிக்கிழமைகளில் மாலை சாத்துவது நல்லது. இதனால், சுபநிகழ்ச்சிகளில் ஏற்படும் தடை நீங்கி விரைவில் நல்லபடியாக நடந்தேறும்.