கார் மிகவும் வசதியான போக்குவரத்து வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறிய கார்களில் 4 முதல் 5 வரையிலும், பெரிய கார்களில் 7 முதல் 8 பேர் வரை அமரலாம். பல ஆண்டுகளாக கார்களில் கூடுதல் அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பின்பக்க கேமராக்கள், ஏர் கண்டிஷனிங், நேவிகேஷன் சிஸ்டம்கள் ஆகியவை இதில் அடங்கும். தற்போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதில் எலெக்ட்ரிக் கார்கள் வர தொடங்கி உள்ளன. மேலும் சந்தையில் பல வகையான மாடல்கள் மற்றும் விலைகளில் கார்கள் விற்கப்பட்டு வருகின்றன. அவரவர்களின் தேவைக்கேற்ப கார்களை வாங்குகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்தது - வாங்கும் ஐடியா இருக்கா...?


விலைகளுக்கு ஏற்ப கார்களில் உள்ள அம்சங்கள் மாறினாலும், ஒருசில விசயங்கள் அனைத்து கார்களிலும் இடம் பெரும். குறைந்த விலை முதல் அதிக விலை கொண்ட கார்கள் என எதுவாக இருந்தாலும் அவை வழக்கமாக சில செயல்பாடுகளை வழங்குகின்றன. அத்தகைய செயல்பாடுகளில் ஒரு விஷயம் காரில் கதவுகளுக்கு மேலே கொடுக்கப்படும் கைப்பிடிகள் ஆகும். பலமுறை நாம் காரில் செல்லும் போது இந்த கைப்பிடியை பிடித்து இருப்போம். கார் வேகமாக செல்லும் போது அல்லது திடீரென பிரேக் பிடிக்கும் போது நம்மில் பலர் இதைப் பயன்படுத்தி இருப்போம். ஆனாலும் நாம் எதற்காக இந்த கைபிடி என்று யோசித்து இருக்க மாட்டோம். 


உண்மையில் இந்த கைப்பிடிகள் காரில் யாருடைய உதவியும் இன்றி ஏறவோ அல்லது இறங்கவோ முடியாத நபர்களுக்காக இந்த கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவுகளுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள இந்த கைப்பிடிகளின் மூலம் காரில் யாருடைய உதவியும் இல்லாமல் பிடித்து கொண்டு ஏறி இறங்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கார்களிலும் இந்த கைப்பிடிகள் அமைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் ஊனமுற்றோர், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எளிதாக ஏறுவதற்கு ஆகும். அதே போல முற்றிலும் நடக்க முடியாமல் சக்கர நாற்காலி இருப்பவர்கள் இதனை எளிதாகப் பிடித்துக் கொண்டு காரில் உட்கார முடியும். எனவே தான் இந்த கைப்பிடிகள் கதவுகளுக்கு மேல் வைக்கப்படுகின்றன.


இந்த ஒரு அம்சத்தை தவிர பயணிகளின் வசதியாக பயணிக்க கார்களில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக காரில் வைக்கப்படும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும். அதே போல காரில் உள்ள ஸ்டீயரிங் நடுவில் இல்லாமல், இடது அல்லது வலது புறம் ஏன் உள்ளது என்று பலமுறை யோசித்து இருப்போம். காரின் இடது அல்லது வலது பக்கம் ஸ்டீயரிங் இருப்பதற்கான உண்மையான காரணம், தூரத்தைக் கண்காணிக்க ஆகும். இதன் மூலம், காரை ஓட்டுபவர் முழு காரையும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ